சனி, 16 ஜூன், 2012

இருமொழியில் பெயரேழுதும் மானமில்லாத் தமிழரே, 
தலைப்பெழுத்தைத் தமிழில் எழுதினால் ஆகாதோ?
எந்த மொழியாளரும் தம் பெயரை இரு மொழியில் எழுதுவரோ? தமிழன் மட்டும் ஏன் G.இளங்கோ என்றும் 
A.கருப்பசாமி என்றும் இருமொழியில் எழுத வேண்டும்? தமிழ்த் தொலைகாட்சி என்ற பெயரில் வரும் அனைத்து தொலைக்காட்சிகளும் இப்படியே இருமொழியில் பெயர் எழுதுகின்றனர். தமிழினத்திற்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் மட்டும் போதாது. தனித்தமிழில், பிறமொழிகள் கலவாமல் எழுதவும் பேசவும் பழக வேண்டும். பிறமொழிக் கலப்பால் ஏற்க்கனவே நாம் பல இனிய தமிழ்ச் சொற்க்களை இழந்து விட்டோம். பல மொழிப்பிரிவினையும் நடந்தேற விட்டுவிட்டோம். இனியும் தமிழ் அழியாமல் காக்க பிறமொழி கலவாமல் பேசவும் எழுதவும் முயலுங்கள், என்னருமைத் தமிழர்களே...செந்தமிழே வெல்லும்....