சனி, 30 ஜனவரி, 2016
முத்துக் குளிக்க வாரீகளா 25: ஆத்திகனே நாத்திகன்!
முத்துக் குளிக்க வாரீகளா 25: ஆத்திகனே நாத்திகன்!: இறந்த மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். நீதிபதி ஆசனத்தில் இறைவன் அமர்ந்திருந்தான்.
சனி, 9 ஜனவரி, 2016
வியாழன், 7 ஜனவரி, 2016
பார்ப்பனர்கள் யார்? மத்தியகிழக்கு ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் தான் இந்த பிராமணர்கள் என்னும் பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்கள். தமிழர்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள். வேளான் தொழிலைக் கைக்கொண்டிருந்தவர்கள். ஆரியர்களோ, இறைச்சியை உண்பவர்கள். சுரா என்னும் மதுவை அருந்துபவர்கள். அதை அருந்தாத தமிழனை அசுரன் என்றனர். தீயை வணங்குபவர்கள் ஆரியர்கள். அதற்கு பலியாக பசுவை யாககுண்டத்தில் போட்டுச் சுட்டுத்தின்றவர்கள் ஆரியர்கள். அதனைத் தடுத்த தமிழர்களை யாகத்தை அழித்த அசுரன் இராக்கதன் எனவும் இழிவு படுத்தினர் ஆரியர். தலையில் பிறந்தவன் பிராமணன் எனவும், நெஞ்சில் பிறந்தவன் சத்திரியன் எனவும், தொடையில் பிறந்தவன் வைசியன் எனவும் காலில் பிறந்தவன் சூத்திரன் எனவும் பிரித்துவைத்தவன் ஆரியம். பிறப்பொக்க எல்லா உயிர்க்கும் என வாழ்ந்தவன் தமிழன்..பெண்களை அடிமைகளாகவே கற்பித்தது ஆரியம். ஆணுக்குப் பெண் சமமே என்று வலியுறுத்தியது தமிழும் சைவமும். எப்படியாவது ஆரியம் இந்தியாவைச் சேர்ந்தது என்று நிறுவிட வேண்டும் என்பதற்காகவே இராமாயணமும், மகாபாரதமும் எழுதப்பட்டன. "அசுவமேதம்" என்ற பெயரில் குதிரைப் பலியை ஆதரித்தது ஆரியம். தமிழர் வரலாற்றை காலம்காலமாக சிதைத்துகொண்டே வருகிறது ஆரியம். பூம்புகாரில் கடலில் மூழ்கிய 9000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் வரலாற்றை வெளியிடக்கூடாது என்று ஆரிய அயோக்கிய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர் வரலாறு வெளியில்வந்தால் ஆரியம் குப்பையாகிப்போகும் என்று இந்த வந்தேறிகளுக்கு தெரிந்திருப்பதினால் இந்த செய்திகளை இருட்டடிப்புச் செய்துகொண்டு வருகிறது, மேலும் அந்த இடத்தில் (பூம்புகாரில்) மேலும் ஆய்வுகள் நடத்த தடையும் விதித்திருக்கிறது...1855ம் ஆண்டு தமிழகத்திலிருந்து மொரீசியசுக்கு பணிக்காகச் சென்ற தமிழர்களுக்கு இந்து என்பது தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது சைவம் மட்டுமே. "மொரீசியஸ் பயணக்கட்டுரை "யில் திரு மணியன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)