புதுப்பிக்கப்படும் பழைய பேருந்துநிலையம்.
தங்கவயல் புதிய பேருந்து நிலையம்.
தங்கவயல் பழைய பேருந்து நிலையத்தைப் புதுப்பிப்பதற்காக பணிகள் நேற்றுமுதல் நடைபெற்றுவருகின்றன.
தங்கவயலில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக கர்நாடக அரசும், நகராட்சி மன்றமும் பலமுறை முயன்றும் பழைய பேருந்து நிலைய வணிகர்களின் எதிர்ப்பால் அம்முயற்சிகள் தடைபட்டுக்கொண்டே வந்தன.
இந்நிலையில் முந்நாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் முயற்சியால், முன்பிருந்த நகராட்சிமன்ற விருந்தினர் மாளிகை இடிக்கப்பட்டு புதிய பேருந்துநிலையம் 29-07-2006ம் ஆண்டு அன்றைய முதல்வர் திரு. குமாரசுவாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
திறப்புவிழா நடத்தப்பட்டு எட்டாண்டுகள் ஆகியும் அப்பேருந்து நிலையம் பயன்படுத்தப்படவில்லை.
தங்கவயலின் வளர்ச்சிக்காக தங்கவயல் மக்கள் சில மாற்றங்களை, (அவை சற்று கடினமானதாக இருப்பினும்) ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தங்கவயல் உரிய வளர்ச்சி காணும்.