ஞாயிறு, 2 மார்ச், 2014

ஆவணி, சிவராத்திரித் திருவிழா.

                   ஆவணி சிற்றூர். தங்கவயலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நீளவாட்டில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இச்சிற்றூரில் சோழர்காலத்திய பழமையான சிவன் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமாத அமாவாசையன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
                 
                    இத்திருவிழாவில் இன்னொரு சிறப்பு நிகழ்வு மாட்டுச்சந்தை. கோலார் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் மாடுகள் இங்கே விற்பனைக்கு வருவதுண்டு.

                    இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் இன்றுதான் இந்தத் திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். நினைவாக இந்தப் படங்கள்..











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக