"ஞானசூரியன்", தன் பெயருக்கேற்ப இந்து மதம் என்பதின் பெய.sரால் நடைபெற்றுவரும்
புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப்பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில்
உள்ள வேதம்,ஆகமம், ஸ்மிருதி உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் ஆதாரத்தோடு
விளக்கிக்காட்டி தமிழ் மக்களிடம் அறிவுப்பயிரச்செழித்து வளரச்செய்யும் சிறந்ததொரு நூலாகும்.
இதனை ஒருமுறை படிப்பவர்கள் சாதி, மதம், சடங்கு, வருணாச்சிரம தருமம், யாகம் பூஜை
திருவிழா முதலியனவைகள் யாவும் ஆரியபார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப்பிழிப்புக்காகத்
தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்திவைத்தவை; என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்ந்து,
அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாறுந்தன்மை ஒழிந்து, பகுத்தறிவும் சுயமரியாதையும்
உடையவர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.
இந்நூலை எழுதித் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ் வடமொழிகளில் தேர்ந்த
அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர்.
இதனை எழுதச்செய்து முதல் முதலாக அதிக பொருட்செலவில் அச்சிட்டு வெளியிட்டவர்
பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழருமாகிய கானாடுகாத்தான்,
தோழர் வை.சு.சண்முகஞ்செட்டியார் அவர்களாவார்.
திரு.மறைமலை அடிகளார், திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளை M.A,.B,L,, திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை
(கப்பலோட்டிய தமிழன்), "நாடார்குல மித்திரன்" பத்திராதிபர் திரு சு.ஆ.முத்து நாடார்,
"குடி அரசு" "ரிவோல்ட்" பத்திராதிபர் திரு.ஈ.வெ.ராமசாமிப் பெரியார், எஸ்.ராமநாதன், M.A.,B.L..,
திராவிடன் பத்திராதிபர் ஜ.ச.கண்ணப்பர், கானாடுகாத்தான், வை.சு.ஷண்முகஞ்செட்டியார்
ஆகிய பெரியோர்களின் கருத்துக்களைப் பெற்றது.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY1lJpy.TVA_BOK_0005461