இன வேறுபாட்டு அடிப்படையில் தீண்டாமை.
தீண்டாமையின் தோற்றமென்ன? இப்பகுதி மிகவும் ஆய்ந்து ஆராயப்படாத ஒருபகுதியாகும். குமுக ஆய்வியளாலர்கள் யாரும் இதைப்பற்றி ஆய்ந்திட அக்கறைப்பட்டுக் கொள்ளவில்லை.
குமுக அறிவியல் அறிஞர்களல்லாத எழுத்தாளர்கள், இந்தியாவைப் பற்றியும் இந்தியாவ்ளுள்ள மக்களைப்பற்றியும் ஏதோ விவரங்களைப் பதிவு செய்ததோடு, தீண்டாமைப் பழக்கத்தைப் பற்றி வெவ்வேறு அளவில்
எழுதியதோடு மட்டில் நிறுத்திகொண்டனர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படிஒரேயொரு நூலறிஞர் மட்டுமே தீண்டாமை தோன்றியதைப் பற்றி விவரிக்க முயன்றிருக்கிறார் என்பதைக் கண்டார்.
அவர்தான் திரு.ஸ்டான்லி ரைஸ். (Stanley Rice) திரு. ரைஸ் அவர்களின் கருத்துப்படி:-
"போரில் எஞ்சி நின்றவர்களே, சாதி நீக்கம் செய்யப்பட மக்கள் என்பதற்கான வலுவானசாத்தியங்கள் இருக்கின்றன. வேலையின் அடிப்படையி சாதி சார்ந்திருப்பதால், அவர்கள் முற்காலத்தில் அடிமைகளுக்குஒதுக்கப்பட்டிருந்த மேளமடித்தல், தோல் வேலை செய்தல் மற்றும் விவசாயக் கூலி
தொழில் செய்யும் வர்க்கத்தினராக ஆக்கப்பட்டதிலிருந்து தெரிகிறது. அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட்ட இனத்தவர்களல்ல. திராவிடர்களால்
வெல்லப்பட்ட பறையர்கள், இந்நாட்டு ஆதிக் குடிமக்கள். பறையர்கள் வேறுபட்ட இனத்தவரை இருந்ததாலேயே,அனைத்து வகையிலும் அவர்களை ஒத்திருந்த திராவிடர்களுடைய திருமணம் போன்ற உறவு நிகழ்ச்சிகள் இவ்வினத்தாரிடையே ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலாக குமுகக் கலப்பு ஏற்பட்டு காலப்போக்கில்
அவர்களினம் தாழ்த்தப்பட்டுவிடும் என்ற காரணத்தாலேயே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்புமுறை முழுமையாய் இடம் பெற்றிருக்க முடியாது. எப்போதும் விதிவிலக்குகள் இருந்திருக்கின்றன. பன்னூற்றாண்டு கால வரலாற்றில் சுமார் நாற்பதுக்கும் மேலான "இனக்கலப்பு" நிகழ்ச்சிகளாவது நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.
அதன் வாயிலாக ஆதி இனத்தவருக்கும் தொடக்ககால திராவிடர்களுக்குமிடையே நிலவிய இரண்டு இனத் தனித்
தன்மையும் துடைத்து அழிக்கப் பட்டிருக்கும். இம்மக்கள் இந்து வாழ்நடையில் நெடுங்காலம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையில் "இந்துயிசம்" மிகவும் சகிப்புத்தன்மையுடைய மற்றும் முறைப்பட்ட சமயக் கோட்பாட்டின்படி சகித்துக்கொள்ளமுடியாத, மிக இழிவான நடப்புக்களில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மதமாற்றத்தை அனுமதிக்காது. ஒருவர் முஸ்லிமாக ஆகமுடிவதுபோல் ஒரு இந்துவாக ஆகிவிட முடியாது. இந்துமதக் கோட்பாட்டிற்கு உடன்பட்டவர்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டவர்கள். ஆதி, குலமரபுக் குடியைச் சேர்ந்த
எவனொருவன் இந்துச் சட்டங்களைப் பெற்று விரும்பி அடிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக்கொள்கிறானோ, இந்துமதம் அவர்களுக்கு மிக இழிவான வேலைகளையே அளித்து, தாழ்வான அந்தஸ்தையே வழங்கி, எப்போதும்
தூரத்திலேயே நிற்கவைத்தும், கோவில்களிலிருந்து விலக்கிவைத்திருக்கிறபோதிலும் விரும்பி, தன்னை இந்து சட்டங்களுக்கு
அடிமைப்படுத்திகொல்கிற ஒருவனை, ஈர்த்திழுத்துக் கொள்வதற்கு இந்துமதம் எப்போதும் தயாராயுள்ளது."
இப்பேருண்மைகளை கூர்ந்து நோக்கும்போது இனத்தன்மையின் அடிப்படை, அதன் இனத்தன்மையில் பெரிதும்
மாற்றம் பெற்றிருக்கும் என்பதற்கு, மானுட ஆய்வியல் வாதங்கள் போதுமனதாயிராது என்பது புலனாகும். ஆரியர்கள் அடிமை
கொண்ட மக்களுக்கெதிராக என்ன சோதனையை மேற்கொண்டார்கள் என்று கொள்ளப்பட்டுள்ளதோ, அதே சோதனையை திராவிடர்கள்
பறையர்கள் மீது திணித்தார்கள் என்பது புலனாகிறது. திராவிடர்கள் தம்முடைய கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் இழிவானதேன்று
எண்ணிய வேலைகளை பறையர்கள் செய்யவேண்டிய கடமையென்று ஒதுக்கி அவர்களை அடிமை நிலையினின்றும் கீழானவர்களாக
ஆக்கியுள்ளார்கள். திருமண நிகழ்வுகள் மட்டுமே கவனத்திற்குரிய ஒன்றல்ல. கடவுள் தொடர்பான சூக்குமமான மவுடீகம் நிறைந்த
குணங்களை பெரிதும் தன்னுள்ளே கொண்டிருந்ததாலும் பறையர்கள் இப்படி மனவலிமை குன்றியர்வர்கலாகவே இருந்தார்கள். அப்படிப்பட்ட
பறையர்களை, திராவிடரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அனுமதிப்பதானது திராவிடர்களுடைய சமுக வாழ்முறைக்கு முரணானது மட்டுமல்லாமல்
அவர்களுடைய கடவுளின் கோபத்திற்குரிய ஓர் செயலாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட பறையர்களை கடவுள் கோயில்களினுள்
கும்பிட அனுமதிப்பதானது- வானத்திலிருந்து உண்மையான அக்கினியை வரவழைப்பது போன்றதாகும் - அந்த அக்கினியே திராவிடர்களை
அழித்துவிடுமேன்றும் நம்பினர். கோரா (Korah) -தத்தான் (Dathan) மற்றும் அபிராம் (Abhiram) ஆகியோர் வரவழைத்த அதே
மாதிரியான ஆசாரமற்ற தூய்மைகேட்ட அக்கினி, தெய்வக்கேடானதாகக் கருதப்பட்டது. கடவுளைக் கும்பிடுவதினின்றும் பறையர்கள்
ஒதுக்கப்பட்டிருந்தும், சாமி கும்பிடுவதற்காக துப்புரவு வேலைப் போன்ற இழிவான வேலைகளைப் புனிதமான கோயில் கட்டிடங்களுக்கு
தீட்டு ஏற்பட்டிடாத வகையில் தூரத்திலிருந்தே செய்திடல் வேண்டும்.
இந்து சமூகப் புறக்கணிப்பு நடைமுறை இப்பறையர்கள்மீது நிலையாகப் பதிந்துவிட்ட அழிக்கமுடியாத கறையை எவ்விதத் தூய்மைச்
சடங்கினாலும், தீர்த்த அபிஷேகங்களினாலும் விலக்கிடமுடியாது. ஒரு பறையரைத் தீண்டுவது, அவரோடு கொடுக்கல் வாங்கல் அனைத்தும்
ஒருமுழம் தூரத்திற்கு எட்டியே இடம் பெறவேண்டும். இல்லையென்றால், அவரைத் தொடுவதால் ஒருவகைத் தொடர்பினால்
ஒட்டிக்கொள்ளக்கூடிய தீட்டு ஏற்பட்டுவிடுமாம். மற்றவர்கள் அவர்கள் நிலத்தை உழுதிடும் வேலையை பறையர்கள் செய்யலாம்.
ஏனென்றால் அதில் ஒருவரையொருவர் தீண்டக்கூடிய வாய்ப்பில்லை. பறையர்களுக்கு ஆணை பிறப்பிப்பதைத் தவிர பறையர்களோடு
எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கக் கூடாது. தீட்டின் முத்திரை பறையர்களின் நெற்றியில் அடிக்கப்பட்டிருக்கிறது. நரம்பில்
குருதியோடுவதுபோல் நிச்சயம் பறையர்களிடையே அத்தீட்டு ஊறிப்போயிருக்கிறது. தாழ்வுற்ற நிலையிலிருக்கிற பறையர்களை,
இந்தியர்களின் எண்ணப்பாவிப்புகள் கீழானவர்களாக்கியது. அக்கருத்துப் படி, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளின் அடிப்படையில்
பறையர்கள் மேலும் இகழ்வானவர்களாகவும், கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர்." என்று திரு.ஸ்டான்லி ரைஸ் அவர்கள் இங்குள்ள
நிலைமைகளை விவரித்துள்ளார்கள்.
திரு.ரைஸ் அவர்களுடைய தத்துவம், உண்மையில் இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது. அவருடைய கருத்துப்படி
தீண்டாமையின் தோற்றம் "இனம் மற்றும் வேலை" ஆகிய இரண்டு நிலைகளில் காண்பதாகத் தெரிகிறது. ஆதலால் அவற்றைத்
தனித்தனியே ஆராய வேண்டியுள்ளது. இப்பகுதியில் - இன வேறுபாட்டின் மூலம் தீண்டாமை தோன்றியதென்று அவர் கூறுகளை
ஆராயலாம்.
திரு ரைஸ் அவர்கள் சொல்லும் இன அடிப்படையில் தீண்டாமை தோன்றியதென்பது இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
(௧ ) தீண்டத்தகாதவர்கள் - ஆரியரல்லாதவர்கள் - திராவிடர்களல்லாத பூர்வகுடிகள் மற்றும்
(௨) தீண்டத்தகாதவர்கள் - திராவிடர்களால் அடிமைப்படுத்தப் பட்டு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டவர்கள்.
......... இன்னும் வரும்......
(அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் எழுதிய "தி அன்டச்சபிள்ஸ்" நூலிலிருந்து )