வெள்ளி, 6 ஏப்ரல், 2012

முதுமைக்காதலில் வெட்கம்...

ஏய் பிள்ளோய்
பத்து பேரப்பிள்ளை கண்டாச்சு,
நானும் நீயும்,
இருந்தும்
உன் வெட்கம்
என்னை
காதல் எல்லையில்,
கட்டிவைத்து கொல்லுதடி,
இத்தனை வயசிலும்,

என்ன கேட்டு விட்டேன்
என் பெயரை ஓர் தடவை
கூப்பிடு என்றதற்கு
இத்தனை வெட்கமா?

உலகம் புரியாதவளாய் இருக்கின்றாய்,
இப்பவெல்லாம் பெயர் சொல்லி
கூப்பிடுவதில் தான் காதல் இருக்காம்,
அதிலும்
டேய் என்று அழைத்தால் தான்
அன்பு இன்னும் அதிகமாம்,
ஓன்றும் தப்பில்ல கூப்பிடு,
என்னை பெயர் சொல்லி,

அப்படியா சொல்றீங்க,
தப்பில்லையா?
அதுதான் மருமகப்பிள்ள
அப்படி கூப்புடுதா?

எனக்கு என்னங்க தெரியும்
நீங்கதான் என் சாமி
உங்கள தவிர என்னங்க
தெரியும்

அதுதான் புள்ள இப்ப
பாஷன்,
கூப்புடு புள்ள ,
கந்தையா...,
டேய் கந்தையா...என்று,
ஆசையா இருக்கு எனக்கு ...!!!


~*~ நன்றி பார்வை ~*~
தள்ளாடும் வயதிலும் தள்ளாடாத காதல்...
உள்ளாடும் உயிர் உள்ளவரை...- எள்ளாடும 
இளையோரே; ஈடில்லா இக்காதல் நீயுணர்ந்தால் 
வளையாது உன் வாழ்வு என்னாளும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக