வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தங்கச் சுரங்கத்தில் புதைக்கப்பட்ட தொழிலாளரின் வாழ்க்கை


கோலாரைக் கொள்ளையடிக்க கூட்டுச்சதி

- சு.பொ. அகத்தியலிங்கம்

ஜூலை 18 ஆம் தேதி மாலையோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்ப டோமாஸ் கபீர் ஓய்வுபெற்றார். 9 ஆம் தேதி மாலை ஒரு வழக்கு குறித்து தன் சேம் பரில் வைத்தே தீர்ப்பு வாசித்தார் . அந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் நடப்பதாக இருந்தது . அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன ? 13 ஆண்டுகளாக வீதியில் நிறுத்தப்பட் டுள்ள கோலார் தங்க வயல் தொழிலாளர் குடும்பங்களில் இந்த அவசரத் தீர்ப்பு ஒளியேற்றுமா ? இந்தத் தீர்ப்பைக் கொண் டாடுவது யார் ? ஏன் ?இந்தக் கேள்விகளை அலசும் முன் பழைய தகவலொன்றை அசைபோடு வோம். நீதிபதி கே .பாலகிருஷ்ணன் ஓய்வு பெறும் முன் அவசர அவசரமாக அளித்த தீர்ப்பு கர்நாடக சுரங்கக் கொள்ளையர் களுக்கு சாதகமாக அமைந்தது . ஓய்வு பெற்ற பின் அதீத சொத்துக்குவிப்பு வழக் கில் அவர் சிக்கினார். சமீபத்தில் தமிழக மாஜிஸ்ட்ரேட் ஒருவர், பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரைக் காதலித்துக் குடும்பம் நடத்தி ஏமாற்றியதற்காக கைது செய்யப் பட்டார் . அரியானா நீதிபதி ஒருவர், மனை வியை கொன்று கொலையை மறைத்ததற் காக கைது செய்யப்பட்டுள்ளார் . நீதிபதி கள் சிலர் சந்தேகத்துக்கு அப்பாற் பட்ட வர்களாக இல்லை; தீர்ப்புகளும் சிலவும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக அமைவதில்லை .தங்கவிலை ஏறிக்கொண்டே போகிறது.
தங்கச் சுரங்கத்தை தனியா ருக்குத் தரக்கூடாது . அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் காரண காரியங்களோடு கர்நாடக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப் பை ரத்து செய்தும் ; உலகளாவிய ஒப்பந் தப் புள்ளி குளோபல் டெண்டர் கோரி தனி யாரிடம் உண்மையான தங்க முட்டை யிடும் வாத்தை தாரைவார்க்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது ஏன்? எப்படி?உண்மை நிலவரம் அறிந்தவர்கள் தீர்ப்பின் மர்ம முடிச்சை அறியாமல் தவிக் கிறார்கள் ; ஆனால் வாழ்க்கை கிழிக்கப் பட்ட கோலார் தங்க வயலின் மூத்த தொழி லாளர்கள், “ ஈட்டி எட்டின வரைதான் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்ற பழமொழியைச் சர்வ சாதாரண மாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள். அவர் களின் அனுபவத் தழும்பு அப்படிச் சொல் லவைக்கிறதோ! சரி! சரி! கோலாருக்கு வருவோம் .கோலாரில் தங்கம் எடுக்கும் கலை மிகப்பழமையான தொழில் . நாகரிக மனிதன் தங்கம் என்கிற மஞ்சள் பிசாசை அதன் மதிப்பை அறிந்த காலந்தொட்டு தங்கத்தொழிலில் ஈடுபட்டுவரும் கேந் திரங்களில் கோலாரும் ஒன்று என்பர் வர லாற்று அறிஞர்கள் . பிரிட்டீசார் வரு கைக்கு முன்பே திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் அந்தச் சுரங்கங்களில் தங்கம் எடுத்து வந்ததாகத் தெரிகிறது . அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும் இதில் ஈடுபட்டதாகத் தகவல் உண்டு . ஆயினும் 1880 ல் ஜான் டெய்லர் அண்ட் கம்பெனி இத்தொழிலில் இப்பகுதியில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே முறை யான சுரங்க ஏற்பாடுகள் செயல்பாட் டுக்கு வந்தது எனில் அது மிகையன்று .குடியாத்தம், திருப்பூர், வேலூர் வட் டாரத்திலிருந்து கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களும் - சாதிய அடக்குமுறை தாங்கமுடியாமல் தப்பி வயிற்றுப்பாட்டிற்காக இங்கே வந்து குடியேறியவர்களுமே மிக அதிகம். பெரும்பான்மையோர் தலித்துகள். “தீண் டாமை தமிழ் நாட்டில் இவர்களை கோயி லுக்குள் அனுமதிக்க மறுத்த போது இங்கே கிறிஸ்துவ தேவாலயங்களின் வாசல் இவர்களுக்காகத் திறக்கப்பட்ட தும் , தங்களுக்கென சொந்த சாமியையும் சொந்தக் கோயிலையும் உருவாக்கிக் கொள்ள முடிந்ததும் தலித்துகள் இங்கே வர ஊக்கம் தந்தது ” - என்கிறார் கர்நாடக மாநில சிஐடியு தலைவரும் சுரங்கத் தொழிற்சங்கத் தலைவருமான வி.ஜே. கே.நாயர்.சுயமரியாதை உணர்வும் , தேசவிடு தலை ஆர்வமும் தமிழகத்தில் ஓங்கி யதன் எதிரொலி இங்கும் வலுவாய் எழுந் தது. 1930ல் சுமார் 16000ம் தொழிலாளர் கள் பணியாற்றி வந்தனர் . அவர்களுக்கு ஒரு அடையாள எண் தரப்பட்டு, செம்புத் தகட்டில் அடையாளம் பொறித்து இரும்பு வளையத்தில் கையில் காப்பு போல் பூட்டப்பட்டிருக்கும்; இவர்கள் தப்ப முயன்றால் சித்ரவதையை, கடும் தண்ட னையை அனுபவிக்க நேரிடும் . கொத்தடி மை கைவளையத்தை அகற்றக்கோரியும், கடும் குளிரிலிருந்து தப்ப ஒரு இடம் கோரியும் போராட்டம் வெடித்து 24 நாட் கள் நடந்தது. கே .ஆர் .சண்முகம் செட்டி யார் என்ற தேசபக்தர் களத்தலைவ ரானார். பிலிப் செயலாளரானார். போராட் டம் தீவிரமானது. துப்பாக்கிச் சூடு நடந்தது . 44 பேர் காயமடைந்தனர். பெரும் போராட்டத்துக்குப் பின் கைவளையம் அகற்றப்பட்டது .தொழிலாளர்களிடையே மெல்ல மெல்ல தொழிற்சங்க விழிப்புணர்வு ஏற் பட்டது. தமிழகத் தலைவர்கள் ப.ஜீவானந் தம், சாரி, சர்க்கரைச் செட்டியார் உள் ளிட்ட தலைவர்கள் பெரும்பங்காற்றினர் . வேறு சில தொழிற்சங்கங்கள் இருப்பினும் செங்கொடி இயக்கம் தொழிலாளர் தோழ னாய்- படைத்தளபதியாய் ஆனது . தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. செங்கொடிப் புதல்வர்கள் கே.எஸ். வாசனும் , வி.எம். கோவிந்தனும் வீரியமிக்க தலைவர்களாய் வலம் வந்த னர் . 1946 ஜனவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை 77 நாட்கள் தீர மிக்கப் போராட்டம் நடைபெற்றது. விளைவு குறைந்தபட்சக் கூலி 12 அணா(75 பைசா)விலிருந்து ஒரு ரூபாய் ஒரு அணா அதாவது 106 பைசாவாகக் கூலி உயர்ந்தது. வேறு சில சலுகைகளும் கிடைத்தன.மைசூர் சமஸ்தானத்துக்கு பொறுப் பாட்சி கோரும் போராட்டத்தில் தொழி லாளர்கள் குன்றா உறுதியுடனும், தளரா ஊக்கமுடனும் பங்கேற்றனர். வெகுண்டது பிரிட்டீஸ் அரசு . தொழிற்சங் கத்தை உடைத்தெறிய சதிவலை பின்னி யது . திடீரென 1946 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள் வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன், ராமசாமி, ராமையா , சுப்பிரமணி உட்பட ஆறுபேர் கொல்லப் பட்டனர். கோவிந்தனும் வாசனும் கைது செய்யப்பட்டன. தொழிற் சங்கங்களி டையே மோதல்கள் உசுப்பிவிடப்பட்டது. இந்து, முஸ்லிம் மதக்கலவரமாக மாற்ற வும் முயற்சிகள் பிரிட்டீசாரால் மேற்கொள் ளப்பட்டன.பத்திரிகையாளர் சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல் பல மதம் , சாதி , மொழி , இனம் இருப்பினும் பகைமையற்ற சமநிலை சமூகமாக கோலார் விளங்கியதே அதன் பாரம்பரியம் . போராட்டங்கள் தொடர்ந்தன . வெள் ளைக்காரன் நாட்டைவிட்டுப் போனாலும் சுரங்கத்தை விட்டு போகவில்லை .
1966ல் மைசூர் அரசாங்கம் சுரங்கத்தை ஏற்றெடுத்த பின்னரே இந்தியச் சுரங்க மானது . 1972 ல் மத்திய அரசு தேச வுடைமை ஆக்கியது . போராட்டங்களின் பயனாய் குடியிருப்பு, இலவசக் கல்வி, சுகாதாரம், குடிநீர் , சமூக நலத் திட்டங்கள் கிடைத்தன . 1956 முதல் ஒரு முறை வாசனும் , ஒரு முறை என். சி .நரசிம்மனும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சட்டமன்ற உறுப்பினராயினர். அடுத்து இராஜ கோபால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின் னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . தேன். சு.மணி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். குடியரசுக் கட்சி, அஇஅதிமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஏனைய சந்தர்ப்பங்களில் வெற்றிபெற்றனர். தொழிற்சங்கத்திலும் கட்சி சார்பு சங்கங்கள் வலுப்பெற்றன சுரங்கத்தின் ஒவ்வொரு நூறு அடியும் ஒரு லெவல் எனப்படும். ஒவ்வொரு லெவ லாக கீழே போகப்போக தொழிலாளியின் துயரம் அதிகரித்தது. சிலிகாஸ் எனும் தொழில்சார் நோய் கடுமையாகத் தாக்கி யது. நுரையீரலை விஷ தூசித் தாக்கு வதால் மூச்சுத் திணறல் , இரத்த வாந்தி , சளி, காய்ச்சல் இதனால் மரணமும் ஏற் பட்டது. மண் சரிவாலும் சாவுகள் நேர்ந்தன.சிலிகாஸ் நோயிலும் விபத்துக் களாலும் இச்சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் இதுவரை 8000 பேர் உயிர்பலியாகி உள்ளனர். இதுவரை 800 டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. அதற் காக கொடுத்த இந்த உயிர்களின் பெரு மதிப்பை எப்படிக் கணக்கிடுவது ? எந்தக் கணக்கில் சேர்ப்பது ?லெவல் 174 ஆன போது, தொழிலாளர் கள் உயிரைப் பணையம் வைத்து கீழே போகத் தயங்கினர் . நிர்வாகத்தின் ஆட் குறைப்பாலும், ஊழியர் வெளியேற்றத்தா லும் படிப்படியாக ஊழியர் எண்ணிக்கை 8000 ஆகக் குறைந்தது . வேலை நியமனத் தடையும் அமலுக்கு வந்தது . இதனால் அத்தியாவசியப் பணிக்கு ஆளெடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. சுரங்கத்தை முடக்கிய போது 3500 பேரே பணியாற் றினர் . 2001 ஆம் ஆண்டு பா. ஜ. க ஆட்சி யில் சுரங்கம் முடக்கப்பட்டது . பணி நின் றது . தொழிலாளர்கள் எந்தப் பணப் பயனு மின்றி வீதியில் தூக்கி எறியப்பட்டனர் . அத்துக்கூலிகளாய் பஞ்சம் பிழைக்க அன்றாடம் பெங்களூருக்குப் பயணப்பட லானார்கள். சுரங்கம் மூடப்படக் காரணம் நஷ்டம் எனக்கூறப்பட்டது உண்மையா ?தங்கச் சுரங்கத்தில் நஷ்டம் ஏன்? என்பதை அறிய 1992-93 ல் எஸ்.எப்.ஆர். சாரி கமிஷன் அமைக்கப்பட்டது . தங்கம் விலையேறும் போது நஷ்டம் ஏன் ? இக் கேள்வி சாரியைக் குடைந்தது . மற்ற பொருட்கள் உற்பத்தியெனில் சந்தைப் படுத்தல் சிரமம் அதிகம் . இங்கு உற்பத் திப் பொருளே தங்கம் , வாங்குவது அரசு . பின் நஷ்டம் ஏன் ? தங்கம் உள்ளூர் சந் தையில் நாளும் விலை ஏறும் சூழலில் - தங்கக் கட்டுப்பாடு அமலில் இருந்த அன்றையச் சூழலில் லண்டன் சந்தை நிலவரப்படி தங்கவிலையைக் குறைவாக அரசு நிர்ணயித்தது . இதனால் 1972 முதல் 1985 வரை 13 ஆண்டுகளில் மட்டிலும் இந்த விலை பாரபட்சத்தால் ரூ.8400 கோடியை அரசு மறைமுகமாகச் சுருட்டிக் கொண்டது . அரசாங்கம் ஒரு பைசாகூட சுரங்கத்தில் மூலதனம் போடவில்லை என்பதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். மைசூர் சுரங்கம் , நந்தி துர்க்கா சுரங்கம் , சாம்பியன் சுரங்கம் இம்மூன்றிலும் சேர்த்தே இந்நிலைதான். சாரி கமிஷ னைத் தொடர்ந்து நடராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது . அதுவும் நட்டத்தின் பின்னால் உள்ள அரசின் மறைமுகச் சுருட்டலைச் சுட்டத் தவறவில்லை.இதற்கிடையில் தங்க உற்பத்தி சுருங்கியது . மேல் லெவல்களில் ஒரு டன் தாதுமண்ணில் 20 கிராம் வரை கிடைத்த காலம் மலை ஏறிட, படிப்படியாக 7 கிராம் , 5 கிராம் என்றானது .
இதுவரை மோச மில்லை . ஆனால் 174 லெவலில் அது வெறும் 0.7 கிராமாகக் குறைந்தது . இப் போது உற்பத்திச் செலவு மிக அதிக மானது . விருப்ப ஓய்வூதிய செலவு சுமை யும், அதற்கு அரசு கொடுத்த கடனுக்கு 17 சத வட்டிச் சுமையும் சுரங்கத்தை மூச்சுத் திணற வைத்தது.சுரங்கத்தை முடக்கி தொழிலாளரை கசக்கித் தூக்கி எறிந்தது.டெத் ஆப் மைன்ஸ் ‘சுரங்கத்தின் மரணம்’ என இதன் கதையை ஃபிரண்டு லைனில் எழுதும் போது பார்வதி மேனன் தலைப்புக் கொடுத்திருப்பார் . ஆனால் சுரங்கம் சாகடிக்கப்படாமல் கோமா நிலையில் இவ்வளவு காலம் வைத்திருந் ததும் இப்போது தோலோடு சுளையோடு விழுங்க பன்னாட்டு திமிங்கிலங்களை அழைப்பது ஏன்? சுரங்கத்தை மீட்க நடந்த முயற்சிகளும் விழுங்க நடந்த சதி களும் கொஞ்சமோ! அதையும் பார்ப் போம்.1992 ஆண்டே பி.ஐ.எப்.ஆர் எனப் படும் தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்தின் முன் சுரங்க நிலை ஆய்வுக்கு வந்தது. எட்டுமுறை கூடி விவாதித்து விட்டு 2000 ஆம் ஆண்டு சுரங்கப் பணி யை மூட்டைகட்டி வைக்க உத்தரவிட்டது. ஏ. ஏ. ஐ. எப். ஆர் எனப்படும் தொழில் மற்றும் மறுசீரமைப்பு ஆணையமும் அதே ஆண்டு இறுதியில் அதே முடிவுக்கு வந்தது. ஒரு டன் தாதுவில் கிடைக்கும் தங்கத்தின் அளவு ஒரு கிராமுக்கும் கீழே போவதால் உற்பத்தியை அதிகரிக்க நஷ்டமே ஏற்படும் எனக் கூறியது; அதே சமயம் தொழிலாளர்களில் ஒரு பிரி வினரும் சூப்பர்வைசர்களும் அடங்கிய பிரிவு கூட்டுறவு துறையில் சுரங்கத்தை நடத்த கேட்ட அனுமதியை ஆணையம் நிபந்தனைகளுடன் ஏற்றது . முதலில் கூட்டுறவு என்பதற்குப் பதிலாக பங்கு நிறுவனமாக மாற்றப்படவேண்டும் . உலகளாவிய டெண்டர் குளோபல் டெண் டர் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப் படவேண்டும் என்பன உட்பட பல நிபந் தனைகள் விதிக்கப்பட்டன. இக்குழுவே மத்திய அமைச்சர் கே . ஹெச் . முனியப் பாவின் கைப்பாவை அமைப்பு என்பது ஊரறிந்த கைப்புண் . இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலிய நிறுவனம் இருப்பது வெள்ளிடை மலை. இவர்கள் எழுப்பிய கோரிக்கை எதுவும் புதிதல்ல, சிஐடியு விடமிருந்து ஹை ஜாக் செய்ததுதான், ஆனால் அதனை அமலாக்க விட்டுக் கொடுத்தல் என்கிற சாக்கில் நீர்த்துப் போகச் செய்வதும் ; ஆஸ்திரேலிய நிறுவ னத்துக்குச் சாதகமாக பூசிமொழுகுவதும் தான் அவர்களின் சிறப்புப் பங்களிப்பு என்கிறார்கள் மூத்த தொழிலாளிகள். அவர்கள் அனுபவ வார்த்தைகள் பொய் யல்ல .ஆஸ்திரேலிய கம்பெனி லாபம் தராத ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற நாயாய் பேயாய் அலையுமா? நரித்தனங்களில் இறங்குமா? ஆம் , நரியின் கண் கோழியின் மீதுதான் . கோலார் தங்க வயலில் இறங்கி நடக்கும் யாரும் மலை மலையாய் குவிந் திருக்கும் கறுப்பு நிற மணல் குன்றுகளைக் காணலாம் . இதனை சைனைடு குன்று என்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் டெய்லிங் டம்ப்பு கூறுவர் . ஆனால் தங்கப் புதையல் இதில் இருப்பதைக் கண்டு கொண்டது அந்த ஆஸ்திரேலிய நிறு வனம். அங்கேதான் கொள்ளைக்காரன் மூளை மிகச் சரியாக திட்டமிடத்துவங் கியது.நம் ஊரில் பழைய பிலிம்சுருளை சேகரித்து வெள்ளி எடுப்போர் உண்டு. பழம் பட்டுப் புடவையிலிருந்து சரிகை எடுப்போர் உண்டு. அது போலத்தான் இதுவும் ஆனால் பெரும் கொள்ளை எப்படித் தெரியுமா ?38 மில்லியன் டன் சைனைடு குப்பைகள் உள்ளன . ஒரு டன் சைனைடு குப்பையிலிருந்து 0.7 கிராம் தங்கம் எடுக்கலாம் . இதற்கு சுரங்கம் தோண்டத் தேவை இல்லை. அரித்து அல்லது சலித் தெடுத்தால் போதும் லாபம் கொட்டும் . ஒரு சின்னக் கணக்கு 38 மில்லியன் என்றால் 3.8 கோடி டன் ஆகும். ஒரு டன்னில் 0.7 கிராம் தங்கம் கிடைக்கும். ஒரு கிலோ என்பது 125 பவுனாகும். அப்படியானால் ஒரு டன்னில் 1,25,000 பவுன். அதாவது ஒன்றே கால் லட்சம் பவுன் தங்கம் எடுக்கலாம். அதாவது 3.8 ஒ 1000 ஒ 1000 ஒ 0.7 ஒ 1,25,000= 3,32,50,00,00,000 பவுன் எனினும்; சேதாரக் கணக்கெல்லாம் போட்ட பின் னும் 25.9 டன் தங்கம் கிடைக்கும் எனக் குறைந்தப்பட்சக் கணக்கை அதிகார வர்க்கமே ஒப்புக்கொள்கிறது . மிகக் குறைவாகக் கணக்கிட்டாலும் 7,770 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதும் எல் லோரும் ஒப்புக்கொண்ட கணக்கு இது போக 12 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலமும், இதர கட்டிடங்களும், வசதி களும் கிடைக்கும்; சுரங்கத்தை நவீனப் படுத்தினால் மேலும் லாபகரமாகத் தங் கம் எடுக்க முடியும் . உண்மையில் பொன் முட்டையிடும் வாத்து இது. இதைக் கைப்பற்றவே ஆஸ்திரேலிய நிறுவனம் பெரும் முயற்சி எடுக்கிறது .இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசே சுரங்கத்தை ஏற்று நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இரட்டை ஓய்வூதி யப் பலனும், வாரிசுதாரருக்கு வேலையும் வழங்க வேண்டும். இக்கோரிக்கை களுக்காக வீதியிலும், நீதிமன்றத்திலும் , அரசியல் களத்திலும் முயற்சி எடுத்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதை மணிக்கணக்கில் விவரிக்கிறார் மார்க் சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜி .அர்ச்சுனன் .கர்நாடக உயர்நீதி மன்றம் சுரங்கத்தை அரசே ஏற்று நடத்த பரிந்துரை செய்தது. தங்கம் ஊசிப் போகாது. விலை ஏறிக் கொண்டே இருக்கும். தனியாரிடம் கொடுப்பது என்பதும் அமைச்சரவை முடி வல்ல என்பதையெல்லாம் ஆதாரத் தோடு சுட்டிகாட்டியது . இது தொழிலாளி வர்க்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றி யாகும் . இதனைக் கழுகுக் கண்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ? கைப்பொம்மை குழு மூலம் பொம்ம லாட்டம் துவங்கியது. மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் நாம் இக்கட்டு ரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தனியாருக்கு வழங்க ஆணையிட்டுள்ளது.இதனை பெரும் சாதனையாகக் கொண்டாடுகிறார் முனியப்பா .
ஆனால் தேசத்தின் பொற்களஞ்சியத்தை ஆஸ் திரேலிய நிறுவனம் வேட்டையாட வழி வகை செய்யப்பட்டுள்ளதாக சங்கத் தலைவரும் சிஐடியுவின் மூத்த தலைவரு மான வி.ஜே.கே நாயர் சுட்டிக் காட்டு வதுடன்; அரசே ஏற்று நடத்துவதுதான் சரியான ஒரே தீர்வு என்கிறார். மேலும் பெரும்பாலான தொழிலாளிகள் முதுமை அடைந்து விட்டதால் கிடைத்தது போதும் எனக் கருதுவார்கள் என முனியப்பா கணக்குப்போட்டு பிரச்சாரம் செய்கிறார் என்பதையும் விஜேகே சுட்டுகிறார். இரட்டை பணப்பயன் சிஐடியு ஆதிமுதல் கோரிவருவதே. சுரங்கப் பணி நிறுத்தப் பட்டதே தவிர நிறுவனம் முறையாக மூடப்படவில்லை. இதனை உயர்நீதி மன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது.எனவே அறிவிக்கப்பட்ட பணப் பயனுடன் 2001 ஆம் ஆண்டு முதல் இது வரையிலான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் . அது தவிர வாரிசு ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும். தேசத்தின் பொற்களஞ்சியத்தைக் காக்க மார்க்சிஸ்ட் கட்சியும் சிஐடியுவும் இறுதிவரை உறுதி யாகப் போராடும் என்கிறார் வி.ஜே.கே.தங்க இறக்குமதியை குறைக்க நீட்டி முழக்கும் சிதம்பரம் பல ஆயிரம் கோடி பெறுமான தங்கக் களஞ்சியத்தை காவு கொடுப்பதைத் தடுக்க வேண்டாமா? அந்நிய செலாவணி இருப்புக் குறைந்து பண மதிப்பு வீழும் சூழலில் நமது தங்கச் சுரங்கத்தை பாதுகாப்பது அரசின் கடமையன்றோ! தங்கம் துருப்பிடிக் காது! தங்க மதிப்பு குறைந்து போகாது! அதனைஇழக்கலாமோ ! வெள்ளையன் அன்று கொள்ளையடித்துப் போன கோகி னூர் வைரத்தை மீட்போம் என அடிக்கடி வீர வசனம் பேசும் அரசும் ஆட்சியாளர் களும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆஸ் திரேலியனோ வேறு எந்த அந்நியனோ கொள்ளை அடிக்க அனுமதிக்கலாமோ ? கேளாக் காதினராய் இருக்கும் ஐ.மு. கூட்டணி அரசின் செவிப்பறை கிழிய பாட்டாளி வர்க்கம் குரல் எழுப்பாமல் தங் கக் களஞ்சியத்தைத் தாரை வார்ப்பதை தடுக்கவே முடியாது.


அபுதாபி, முசஃபா துறைமுகம்