வியாழன், 27 அக்டோபர், 2011
செவ்வாய், 25 அக்டோபர், 2011
உலகிலேயே மிக உயரமான பூ
20 Oct 2011
உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. இதன் இரசாயனப் பெயர் Amorphophallus Titanum ஆகும். ரைரன் அரம் பூ இந்தோனேசியாவின் சுமாத்திரா மழைக்காடுகளில் பூத்துக் காணப்படும் ஒரு அரிய வகைப் பூ ஆகும்.

ரைரன் மலரானது பூக்கத் தொடங்கி முதல் 10 நாட்களும் 77 சென்ரி மீற்றர் உயரமாகவும் பின்னர் 45 சென்ரி மீற்றரிலிருந்து 122 சென்ரி மீற்றர் வரை உயர்ந்து வளர்ந்து வருமாம். ரைரன் அரம் மலரானது முழுமையாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வரை காணப்படுமாம்.
அத்துடன் ரைரன் மலரினது நிறையானது 170 பவுண்டினை (77கிலோ கிராம்) விடவும் அதிகமாகுமாம். உலகில் மிகப்பெரிய பூவாகிய “ரப்லீசியா” மலரினைப் போன்றே இந்த மலரினுடைய மணமும் சகித்துக்கொள்ள முடியாததாகும் என்பது இந்த மலரின் விசேட அம்சமாகும்.
“ரைரன்” மலரானது ஒரு தனி மலரல்லவாம், ஏனெனில் இது அதிகமான சின்னஞ்சிறிய மலர்களால் உருவான ஒரு கூட்டு மலராகும் என்பது

ஏழாம் அறிவு...
"தமிழன் என்றால் ஒரு நல்ல திமிர் இருக்க வேண்டும்" - ஆணித்தரமாக கூறிய 'ஏழாம் அறிவு'
by Ganthi Ganesh on Tuesday, October 25, 2011 at 6:33pm

சற்று முன் ஏழாம் அறிவு படத்தை பார்த்துவிட்டு வந்தேன்.. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது..
தலைப்பை பார்த்து ஒரு சிலர் "மற்றவனெல்லாம் அந்த திமிருக்க அடங்கி போக வேண்டுமா?" என கேட்ப்பர்கள்.. "நல்ல திமிர்" என்பது நாம் தலை குனியாமல் வாழ்வதற்கு சமமே தவிர, மற்றவர்களை அடக்கி ஆள்வது அல்ல
சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான்
ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்
சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்
7 ஆம் அறிவை நாம் படமாக எடுத்து கொள்ள முடியாது, அவர்களின் வியாபாரத்தையும் (தமிழர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என வழக்கமாக கேட்போர்க்கு) தாண்டி நமக்கு ஒரு பாடமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
கதையின் கரு:
"தமிழர்களிடம் இருந்து கலையை கற்று தமிழர்களுகே அழிவு ஏற்படுத்த சீனர்கள் முயல்வதையும், தமிழனிடம் இருந்து அழிந்த அந்த கலை மூலம் சீனர்களின் திட்டங்களை முறியடிப்பது"
என ஒரு வரியில் படம் முடிகிறது
கவனிக்க வேண்டியவை:
- இதில் ஏழாம் அறிவாக தமிழர்கள் கண்டறிந்த கலைகள் காட்டப்பட்டுள்ளது
- அறிவியல் பிறப்பதற்கு முன்னரே தமிழன் "இயற்பியல், மருத்துவம், வான்வெளி, தற்காப்பு கலை" உள்ளிட்ட பல கலைகளை இப்போது இருப்பதை விட சிறப்பாக கூறி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.. உதானரத்திர்க்கு DNA எனப்படும் மருத்துவ அறிவியலை ஓலை சுவடிகள் முன்னரே சாதாரணமாக கூறிவிட்டனர் என கூறுகிறது
- உலகிற்கு வீரத்தையும் எப்படி வாழ வேண்டும் என கூறியவன் தமிழன் என ஆதாரத்துடன் கூறப்பட்டு உள்ளது
- காற்றை கட்டு படுத்தும் கலை, கண்கள் மூலம் மற்றவர்களின் மூளையை கட்டுபடுத்தும் கலைகள் இருக்கிறது என ஆதாரத்துடன் நிரூபித்தாலும், சீன படங்களிலும் இப்படி காட்டுவார்களே என பார்க்கும் போது நம்ப தோன்றுகிறது
நாம் ஏன் நாமாக இல்லை என கூறும் படம்:
- பல கலைகளை அறிந்த மற்ற நாட்டினர் தமிழர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கின்றனர்.. அவர்கள் தமிழன் என கூறுவதை பெருமையாக கொள்கின்றனர்.. ஆனால் இங்குள்ள தமிழனோ தமிழன் என்று கூற வெக்க படுகிறான் என கூறபடுகிறது
- நம்மிடம் இருக்கும் திறமைகளை வைத்து நாம் தான் மற்றவர்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும், ஆனால் நாம் யாரென்று நமக்கு தெரியாததால் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது
- வீரத்திற்கு பெயர் போன நாம் நம் பெருமை தெரியாமல் நாகரீக கோமாளிகளாக வெளி வேடம் போடுவதாகவும், அதனால் முன் பக்கம் காயம் வாங்கிய நாம் புறமுதுகிட்டு சில நேரங்களில் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது
- "நம் வரலாறு நமக்கு தெரியாததால் மற்றவன் தொழில் நுட்பத்தை பார்த்து வியப்படைகிறோம்" என கூறப்பட்டுள்ளது
- ஈழம் பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது
- தமிழரின் வரலாறை படிக்காமல் விட்டதுதான் நமது பெரிய தவறு, வரலாற்றை படித்தால் தமிழன் என்ற திமிர் வரும் என கூறப்பட்டுள்ளது
- நம் திறமைகளை மற்றவன் மதித்து பயன்படுத்தி நம்மையே மிதிக்கிறான் , நாம் மதிக்க மறந்து விட்டோம் என கூறும் படம்
- "அழிந்த தமிழர்களுக்கும், அழிக்க முடியாத தமிழுக்கும் சமர்ப்பணம்" என படம் முடிகிறது
படத்தில் நாகரீக கோமாளிகளுக்கு பாடம் காட்டிய "A.R.முருகதாசுக்கு" நன்றிகள் கோடி
குறிப்பு:
நாம் பழமையை பற்றி மட்டும் பேசி பேசி என்ன சாதித்தோம் என கூறுபவர்களுக்கு, அந்த பழமையின் மூலம் தான் மற்றவன் சாதித்தான், நாம் பேசி பேசித்தான் அந்த பழமையை மறந்தோம் அடிமை ஆனோம்.. உதாரணத்திற்கு, தற்போது கூட குங்-பூ என்ற கலையும், அம்மை நோய்க்கு மருந்தும் தமிழன் கண்டு பிடித்து கொடுத்ததாக கூறி நடை முறையில் சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. நாம் பழமையை பேசாமல் காலத்திற்கேற்ப Update செய்து கொள்ள வேண்டும் என கூறுபவர்களுக்கு, எத்தனை காலம் ஆனாலும் நம் தாய் தந்தையர் தான் நமக்கு தாய் தந்தையர், அதற்காக பல வருடங்கள் ஆகி விட்டதே என்று தாய் தந்தையரை Update செய்து கொள்ள முடியாது... மூலதனம் (Source) எத்தனை பழமை ஆனாலும் மாறாது
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
கண் விழி தமிழா,,,,
விழியில்லாக் குருடர் போல்
மொழியில்லாமல் வாழ்வாயோ தமிழா,
பழி சொல்லுமே வரும் காலம், உன்னை
இழி சொல்லால் தூற்றுமே;
பணமீட்ட வழியறிந்தாய், தமிழ்
இனம் மீட்கும் வழியறிந்திலையோ,
தமிழ் வாழ்ந்தால் இனம் வாழும், நம்மில்
தமிழ் வீழ்ந்தால் இனம் வீழும்;
இனிதான, அமிழ்தான, உன் தமிழ்விடுத்து
அயல்மொழியை உன்நாவின் அரியணையில்
அமர்த்துகிறாய், ஆண்டையிடம் அடிமையாக
அழைப்பிதழும் அனுப்புகிறாய்;
கண்விழி தமிழா..காலம் கடக்குமுன்னே..
செந்தமிழே வெல்லும்...
மொழியில்லாமல் வாழ்வாயோ தமிழா,
பழி சொல்லுமே வரும் காலம், உன்னை
இழி சொல்லால் தூற்றுமே;
பணமீட்ட வழியறிந்தாய், தமிழ்
இனம் மீட்கும் வழியறிந்திலையோ,
தமிழ் வாழ்ந்தால் இனம் வாழும், நம்மில்
தமிழ் வீழ்ந்தால் இனம் வீழும்;
இனிதான, அமிழ்தான, உன் தமிழ்விடுத்து
அயல்மொழியை உன்நாவின் அரியணையில்
அமர்த்துகிறாய், ஆண்டையிடம் அடிமையாக
அழைப்பிதழும் அனுப்புகிறாய்;
கண்விழி தமிழா..காலம் கடக்குமுன்னே..
செந்தமிழே வெல்லும்...
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்...
by இராசசேகரன் சீதாராமன் on Saturday, October 15, 2011 at 10:18pm
விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் 28
தங்கவயலின் தனிப் பெரும் தலைவர் க. பூசாமி
- ஏ.பி. வள்ளிநாயகம்
தங்கம் கோலார் தங்கவயலில் தனது இருப்பை உணர்த்திய காலத்திலிருந்தே தொல் தமிழர்களும், அய்ரோப்பிய நிபுணர்களும் நீங்க முடியாத பிணைப்புகளோடு இருந்தனர். தொல் தமிழர்களின் உழைப்பு மூலதனம்தான் கோலார் தங்கவயலில் தங்கம் எடுக்க, ஒரே உந்து சக்தியாக இருந்தது. தங்க வயலின் விளைச்சல் குறித்து அவர்களுக்குதான் தப்ப முடியாத பெரிய பெரிய உத்தேசங்கள் இருந்தன. தங்கத்தைத் தேடுவதில், தேடிக் கண்டதில், தேவையற்ற சேர்க்கைகளைக் கழித்து தனித்ததொரு தங்கமாக வார்த்தெடுப்பதில், வேட்கையும் வைராக்கியம் நுணுக்கம் அவர்களிடமே குடி கொண்டிருந்தன.
இதில் குறிப்பிட்டுச் சொல்லித் தீரவேண்டிய மக்கள், வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து, தங்களின் மனித ஆற்றலுக்கு உட்பட்ட வரையில் பூமியின் மய்யத்தை நோக்கிக் குடைந்து, கோலார் தங்க வயலில் உலகத்திலேயே மிக ஆழமான தூரத்தில் இறங்கி, தங்கத்தை வெட்டியெடுத்து அதை வெற்றிகரமான தொழிலாக்கினர். தொல் தமிழர்களோடு பிணைந்து சுரங்கத் தொழில் நடத்திப் புகழடைந்தவர்கள், இங்கிலாந்து நாட்டவரான ‘ஜான் டெய்லர் அண்ட் சன்' நிறுவனத்தினர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக, மிக அதிக அளவில் தங்கத்தை உற்பத்திச் செய்யும் சுரங்கப் பகுதி கோலார் தங்க வயலென நிலை நிறுத்தினர்.
கிராமங்களின் சாதி ஆதிக்கச் சூழலின் விளைவு என்ற வகையில், இடம் பெயர்தல் ஒரு கிளர்ச்சியாகிப் போனதில், அது மற்றவர்களுக்கு மலினப்படாமல் சுயம் காக்கும் இயக்கமானது. சேற்றில் சிதறிய சோற்றுப் பருக்கைகளை அந்தச் சேற்று நீரிலேயே கழுவி விழுங்கி, உண்ட கையைக் கோவணத்தில் துடைத்துக் கொண்டு, பரம்படித்து பயிர் வளர்த்த வேளாண்குடி மக்கள் தங்க வயல் சூழலுக்கேற்ப மாற்றமடைந்தனர். அடிக்கடி ஏற்படும் பூமி அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பளிக்கத்தான் தட்டி வீடுகள் என்று ஆங்கிலேயர் வழங்கிய எட்டடிக் குடிசைகளில் வாழ்ந்தே தங்கத் தொழிலாளர் ஆகினர்.
வைகறை முதல் அந்தி இருட்டு சாயும்வரை உழைத்த காலமான அன்று எட்டுமணி நேர வேலை என்ற வரையறுப்பு இல்லை. இருப்பினும், மக்களின் பழக்க வழக்கங்களில் மாறுதல்கள் தோன்றி அய்ரோப்பியப் பண்பாட்டிற்கேற்ப நடை, உடை, சிகையலங்காரம், வழக்கு மொழியில், உணவு முறையில் ஆங்கிலக் கலப்பு எனப் புதிய சூழ்நிலை தங்க வயலில் உருவாகியது. தொல் தமிழர்கள், பல்லாயிரம் அடிகள் பூமிக்கடியில் இறங்கி, பாறையைப் பிளந்து ரத்தம் சிந்தி ‘கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்' என்னும் தங்க வயலுக்கே உரிய ‘புண் மொழி'க் கேற்ப உயிரைப் பணயம் வைத்தே சுரங்கத் தொழிலை வளர்த்தெடுத்தனர்.
1880 சுரங்கத் தொழிலின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. முதல் இருபதாண்டு (1880 - 1900) சுரங்கத் தொழில் வளர்ச்சியுற்ற காலத்திலேயே, ஆதிதிராவிடர்கள் வெறும் பாட்டாளிகள்தான் என்பதைத் தாண்டி, ஒருசில சமூக ஆளுமைகள் சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய முன்னேற்ற கட்டத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் சதாயத்தின் அறிவு - ஆக்கப் பரிணாமத்தை வெளிச்சமாக்கிய தொழில் விற்பன்னர்களாக வாய்த்தனர். சமூகப் பாட்டாளி வர்க்கம் உருமாற்றம் பெறுவதின் படிமங்களாயினர். இவர்களில் முதன்மையானவர், கோலார் தங்கவயல் மைசூர் மைன்ஸ் பொறியாளரும், ஆதிதிராவிடர் மகாஜனசபையின் தலைவருமான க. பூசாமி.
"சுரங்கத் தொழிலில் புகழ் பெற்ற காண்ட்ராக்டராகவும், திறமை மிக்க இஞ்சினீயராகவும் க. பூசாமி பணியாற்றியபோது, தனது தொழில் ஆற்றலில், காழ்ப்புணர்வு கொண்டு மாசு கற்பித்த ஆங்கிலேயர்க்கு அடங்கி செயல்பட விரும்பாமல், சுயமரியாதை வீரராய் பதவி விலகி, இனி வெள்ளையர் கம்பெனியின் மண் மீது கால்களை வைப்பதில்லை எனச் சூளுரைத்துத் தங்க வயலிலேயே பற்றிப் படர்ந்து, வெள்ளையருக்குத் தாம் எந்த வகையிலும் குறைந்தவரல்ல என்பதை நிரூபணம் செய்பவராய், தங்க வயலின் தெற்கே அய்ந்து கிலோ மீட்டர் தொலைவில், பிசாநத்தம் பகுதியில் தனது சுய முயற்சியில் ஒரு புத்தம் புது தங்கச் சுரங்கத்தை நிறுவினார். அதன் தலைமை இஞ்சினீயராகத் தானே பொறுப்பேற்றுத் தங்க உற்பத்தி செய்து, தன்னகங்கார ஆங்கிலேயரைத் தலைகுனிய வைத்துப் பாடம் புகட்டினார்."
கே.எஸ். சீதாராமன் எழுதிய "கோலார் தங்க வயல் வரலாறு' நூலிலிருந்து பக்கம் : 187
சுரங்கத் தொழிலியல் துறையில் தேர்ச்சிப் பெற்ற க. பூசாமி, பொறியாளராய் பொறுப்பேற்று, தங்கத்தை அடையும் ஆற்றல்களின் வாசல்களைத் திறந்து வைத்த ஒரு சிறந்த சுரங்கத் தொழிற்கலை நிபுணர் ஆவார். தொழிலறிஞர் க. பூசாமி, ஆங்கிலேயர் அடங்கிய தங்க உற்பத்தி குழுமத்திற்கும், சுதேசி விதேசி பொறியாளர்கள் அடங்கிய தங்க உற்பத்திக் குழுவிற்கும், தங்கம் எடுக்க வியூகத்தை வகுத்துக் கொடுப்பதில் பாலமாகத் திகழ்ந்தார். சுரங்கத்தொழில் பொறியியல் கல்வியில் அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் மாறுதல்களைக் கொண்டு வந்தார். ஆங்கிலேயர்களின் சுரங்கத் தொழில் நிலைய அக மதிப்பீட்டு முறைமைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, சுரங்கத் தொழிலை நிலைப்படுத்தி, வெற்றியாக்கி, விரிவாக்கி தன்மையானப் பங்காற்றினார்.
சுரங்கத் தொழில் மேதையான இவர், சுரங்கத் தொழிலுக்கான தொழிற்சாலைக் கட்டடங்கள், காரியாலயங்கள், ஆங்கிலேயர்களுக்கான பங்களாக்கள் முதலியனவற்றைக் கட்டும் கட்டடத் தொழிலிலும் சிறப்புற்றார். தங்கவயலின் சுரங்கத் தொழில் தேவைகளுக்கேற்ப கட்டடக் கலையைக் கட்டமைத்த ஆதர்ச சக்திகள் வரிசையில் இடம் பிடித்தார். கட்டடக் கலையின் எல்லைகளுக்குச் சென்று சஞ்சாரம் செய்த இணையற்ற கட்டடக் கலைஞரான இவர், கட்டட ஒப்பந்தக்காரர் நிலையில் பெரும் செல்வந்தர் ஆனார். அக்காலத்தில் இருந்த முன்னோடி ஆளுமையோடு ஒரு சேர அணிவகுத்து வெளிப்பட்ட மிக முக்கிய புள்ளிகளாய் எம்.சி. மதுரைப் பிள்ளை, ஆர்.ஏ. தாஸ், செல்லப்பா போன்றோர் விளங்கினர்.
இவர்கள் அனைவருக்கும் வைணவ மயக்கமிருந்த போதிலும், ஆதிதிராவிடர் சமூக நலனில் தெளிவுள்ளவர்களாக இருந்தனர். தங்கள் பணக்கார வாழ்விலும் மிகப் பெரிய சக்தியாக, தம் தாழ்த்தப்பட்ட மானுடத்தையே நேசித்தனர். தங்களுக்கான முன்னேற்றத்தை தோற்றப்படுத்தியபடியே ஒரு முனையில் நகர்ந்து சென்றாலும், மறுமுனையில் சமூக முன்னேற்றமே இவர்களுடையது. இவர்கள் சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துபவர்களாகவும், சமூக வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களாகவும், கொடை வள்ளல்களாகவும் திகழ்ந்தனர்.
இவர்கள், தங்கள் ஆன்மீகச் சாய்மானமான வைணவத்தை, பார்ப்பனர்களின், பார்ப்பனியர்களின் குறுக்கீடு இல்லாமல் தாங்களே ஆட்சி செய்தனர். "தங்கவயல் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குத் தொண்டாற்றும் பணியில், வைணவர்களின் சேவைக்கு ஈடுகொடுக்க ஏனையோரால் இன்று இயலாது'' என பவுத்த மார்க்க ஆளுமையான இ.நா. அய்யாக்கண்ணு புலவர் அவர்கள் அங்கீகரிக்கும் அளவிற்கு, தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான க. பூசாமி மற்றும் எம்.சி. மதுரைப்பிள்ளை, ஆர்.ஏ. தாஸ் போன்றோரின் தலைமையில் வைணவர்களின் சமூகத் தொண்டு விரிவடைந்தது.
இதில், தொண்ணூறு சதவிகிதத்திற்குமேல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருங்கே சேர்ந்து வாழ்ந்த ஒரே நகரமாக விளங்கிய தங்கவயலில், சமூகப் புரட்சியின் முன்னணித் தலைவர் க. பூசாமியே ஆவார். தலைவர் க. பூசாமி, பொருளாதாரத்தில் உச்சத்தில் இருந்த நிலையில் தம் தனித்துவத்தை மக்கள் வசப்படுத்தி, ‘என் இன நன்மைக்கு இன்று நான் என்ன செய்தேன்?' என்ற கேள்வியை மனத்தில் இருத்திக் கொண்டு, பலனைப் பற்றி எண்ணாமல் சமூக மனிதரான மனப்பக்குவத்திற்கே தன் மனித இயங்கியலை ஒப்படைத்தார். பறிபோன அவர்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்க, எம்.சி. மதுரைப் பிள்ளையைத் தோழமையாகக் கொண்டு, ‘கோலார் தங்க வயல் ஆதிதிராவிடர் மகா ஜன சபை'யினைத் தோற்றுவித்து அதன் தலைவரானார். சபையின் செயலாளராக மைசூர் மைன்ஸ் வி.எம். வடுகதாசரை பொறுப்பேற்கச் செய்தார். சபையின் செயலாளரை ஆசிரியராகக் கொண்ட ‘திராவிடன்' இதழும் வெளிவருமாறு செய்தார். இருக்கும் நிலையிலிருந்து ஏற்றமிகு நிலைக்குச் செல்ல கொந்தளிப்புகளை ‘திராவிடன்' இதழ் உண்டாக்கியது.
தனிநபர் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும், மூலதனமே இல்லாத தாழ்த்தப்பட்டோருக்கு கல்விதான் மூலதனம் என்பதை உணர்ந்த தலைவர் பூசாமி, 1900 ஆம் ஆண்டு வரை கல்வி கற்க வாய்ப்பின்றி, வயது வந்தோரில் பெரும்பாலோர் ‘கை நாட்டு' வைக்கும் நிலையில் மாரிக்குப்பத்தில் சிறீ ஆண்டாள் பள்ளியை நிறுவினார். இதில், ஆரம்பக் கல்வியை முடித்த ஆதிதிராவிடர்கள், கடைநிலை ஊழியர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுத் தமது சுயமுயற்சியில் அடுத்த மேல் வேலையில் அக்கறைக் காட்டி, ஆங்கில மொழியை அழகாய் வடிவமைத்து உத்தியோக உயர்வு பெற்று எழுத்தர்களாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் இந்தியாவின், இந்திய அமைச்சர் மாண்டேகு செம்ஸ்போர்ட் சென்னைக்கு வருகை புரிந்தபோது, அவரைச் சந்தித்து சமூக விசாரணையை க. பூசாமி ஏற்படுத்தினார். "இந்திய அமைச்சருக்கு வரலாற்றில் ஆதிதிராவிடர்கள் யார் என்பதை விளங்கப்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள சமூகத் தீமைகளை எடுத்துரைத்தார். பூர்வ குடியினரை ஆதிதிராவிடரென்றே அழைக்கும்படி, இந்திய ஆளுநருக்குத் தந்தி கொடுத்தார். ஆதிதிராவிடர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வீச்சில் தங்க வயல், பிரம்மபுரம், சென்னை ஆகிய இடங்களில் மாநாடுகளை நடத்தினார். வட தமிழகத்தில் மாநாடுகள் நடத்த உதவினார். மைசூர் சமஸ்தானத்திலும் சென்னை மாகாணத்திலும், அரசியல் அதிகாரப்பகிர்வில் தனிப் பிரதிநிதித்துவம் தாழ்த்தப்பட்டோருக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவர்களுக்கு அரசியல் அதிகாரத் தனித்தன்மையை நிலைநாட்ட, புரட்சியாளர் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் லண்டனில் பங்கேற்றபோது அம்பேத்கரின் எண்ணம் ஈடேற, ஆதிதிராவிடர் மகாஜன சபை சார்பில் வாழ்த்துத் தந்தியினை தலைவர் பூசாமி அனுப்பி வைத்தார்.
1924 மார்ச் 17 அன்று மைசூர் சமஸ்தானத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அசெம்பிளி ஏற்படுத்தப்பட்டது. சமஸ்தானம் முழுமையிலுமிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தலைவர் பூசாமி, ஆதிதிராவிடர் மகாஜன சபையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் காரியமாக, தாழ்த்தப்பட்டோர் இழிவான சொல்லாடல்களால் பாவிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு ‘ஆதிதிராவிடர்' எனும் பெயரில் கையாள்வதில் வெற்றி கண்டார். மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அவ்வாறே விளங்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார்.

அவ்வப்போது நடைபெற்ற பிரதிநிதி சபைக் கூட்டங்களில், தாழ்த்தப்பட்டோருக்குக் கல்விச் சலுகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொழில் மற்றும் விவசாயத்திற்கு உதவி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அரசை தாழ்த்தப்பட்டோர் நலனில் செயல்பட வைத்தார். தலைவர் பூசாமி, தன்னளவில் தன் சமூக மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதத்தில், வெள்ளையர்களுக்குச் சவால் விடும் வகையில் கார்கள், லாரிகள், பேருந்து வாகனங்கள் பலவற்றுடன் ராபர்ட்சன் பேட்டையில் ‘கே டாக்கீஸ்' அருகில் ‘சிறீ ஆண்டாள் மோட்டார் சர்வீஸ் அண்ட் ஒர்க்ஸ்' எனும் போக்குவரத்துக் கழகத்தை நிறுவி வேலை வாய்ப்பினை அளித்தார்.
சிறீ நம் பெருமாள் பள்ளியை நிறுவிய தலைவர் எம்.சி. மதுரைப் பிள்ளை காலமானதையடுத்து, 1935 இல் அப்பள்ளியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கல்விக்கென எவ்வளவு செலவழித்தாலும் வீணில்லை என்பதே இவரது கொள்கை. அக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குக்கூட அரசுத் தேர்வுகள் நடைபெற்றதன் பொருட்டு, தங்கவயலில் முதன் முதலாக இரவுப் பள்ளி வகுப்புகள் நடத்தி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முதல் தரத்தில் தேர்வு பெற ஊக்குவித்தார். இரவுப் பள்ளி வகுப்புகள் நடந்தேற, சிறீ நம் பெருமாள் பள்ளி மேலாளர் வி.டி. பெரியாழ்வாரை பொறுப்பேற்கச் செய்தார்.
தங்கச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு 1929 வரை எந்தவிதப் பொழுது போக்கு அம்சமும் கிட்டாமல், அவர்கள் மனவறட்சிக்கு ஆளாகியிருந்த நிலையில், பூசாமி அவர்கள், 1930 இல் நியூ இம்பீரியல் ஹாலை ஆங்கிலேயர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, தமிழ் பேசும், பாடும் படமான ‘சத்தியவான் சாவித்திரி'யை வெளியிட்டார். தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் புழங்கிய அரங்கம் அசுத்தமாகிவிடுகிறது என்று காரணம் காட்டி, ஆங்கிலேயர்கள் குத்தகை உரிமம் தொடரத் தயக்கம் காட்டியதால், இதை மானப் பிரச்சனையாக எதிர்கொண்ட பூசாமி அவர்கள், ‘சுயமரியாதையின் சின்னமாக' ‘ஜுபிலி ஹால்' திரையரங்கத்தை 1936 ஆம் ஆண்டில் கட்டி முடித்து வடதமிழகம் புகழத் திறப்பு விழா நடத்தினார். பூசாமி அவர்களின் சுயமரியாதை வீரியத்தைப் புகழ்ந்து இ.நா. அய்யாக்கண்ணு புலவர், வி.எம். தாவீதுப் புலவர், வி.எம். வடுக நம்பியார், மதுரகவி சி.எஸ். அதிரூபநாதன், ஏ. பாக்கியநாதன் போன்றோர் புகழ்மாலை சூட்டினர்.
பூசாமி அவர்களின் பெருமுயற்சியால் 1937 ஏப்ரல் 5 ஆம் நாள் அன்றைய மைசூர் திவான் ராஜ மந்த்ரப் பிரவீணா என். மாதவராவ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1938 செப்டம்பர் 7 ஆம் நாள் இளவரசர் கண்ட்டீரவ நரசிம்மராஜா (உடையார்) அவர்களால் தங்க வயல் சானிடரி போர்டு உயர் நிலைப் பள்ளி திறந்து வைக்கப்பட்டது. குறைந்த பேச்சு நிறைந்த செயல் என்பதனை வாழ்வின் குறிக்கோளாக ஏற்றுச் செயல்பட்டு வந்த பூசாமி அவர்கள், தாம் திரட்டிய செல்வத்தின் பெரும் பகுதியை தம் மக்களின் நலனுக்குக் கொடுத்தே மகிழ்ந்தார்.
மக்கள் சேவையின் பொருட்டே, பெங்களூர் சென்று திரும்புகையில் 1941, சூன் 27 ஆம் நாள் கோலார் நெடுஞ்சாலையில் காரிலிருந்தபடியே மாரடைப்பால் மக்களை விட்டுப் பிரிந்தார். இறுதி மரியாதையைச் செலுத்த தங்கவயல் மக்கள் அனைவருமே திரண்டு வந்து கண்ணீர் வடித்தனர். இவரது இறுதி ஊர்வலத்திற்கு ஈடான ஒன்று, அதன் பிறகு தங்கவயலில் நடந்தேறியதில்லை. 26.7.1941 அன்று கோலார் தங்கவயல் ஆதிதிராவிடர் மகாஜன சபை சார்பில், மாபெரும் இரங்கல் கூட்டம், சீப் மைனிங் இன்ஸ்பெக்டர் கே. துரைசாமி அவர்கள் தலைமையில் ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் ஹாலில் நடைபெற்றது.
தனிப் பெரும் தலைவர் பூசாமி அவர்கள், தொல் தமிழர்களின் வாழ்வியல் உரிமைக்கும், சுயமரியாதைக்கும், சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் உத்திரவாதமாக வாழ்ந்தவர். சாராம்சத்தில் பவுத்த வாழ்வியல்படி, தானும் வாழ்ந்து உயர்ந்து, சமூகத்தையும் உயரச் செய்தவர்.
திரு.க.பூசாமி

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)