தமிழன் இஸ்லாத்தைத் "தழுவினான்" என்றுதான் கூறுகிறீர்களேயன்றி தமிழனுக்குரிய மதம் இதுதான் என்று எவராவது அறுதியிட்டுக் கூறமுடியுமா.? தமிழன் இயற்கை வழி நின்றவன்... " அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பக"ல"வன் முதற்றே உலகு" என்னும் திருக்குறளே சான்றுரைக்கும் தமிழன் இயற்கையை மட்டுமே சார்ந்தவன் என்று...வட துருவ நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு பன்னிரண்டு ராசி அமைப்பினைக் கட்டமைத்தது திசை அறிவதற்காகவும், காலத்தை அறிவதற்காகவுமே அன்றி சோதிடம் சொல்லிப்பிழைக்க அல்ல...சிவன்
என்பவன் தமிழர்களின் ஆதி தலைவன்...நடனத்திலும், இசையிலும் யோகத்திலும் மிகவும் திறமை வாய்ந்தவன்...ஒரு குழந்தையை வறுத்தெடுக்கும் வெயிலில் கீழே போட்டு அதன் மீது ஏறித் தாண்டவம் புரிந்தனன் அக்குழந்தைக்கு ஏதும் தீங்குநேராவண்ணம் தன் உடலின் எடையைக் குறைத்ததன்வாயிலாக...அதனால் தான் அவன் கூத்தரசன் என்று அழைக்கப்பட்டான்...இதையே ஆரியன் , குழந்தை வடிவிலான ஓர் அசுரனை அழிப்பதற்காக சிவன் கூத்தாடியதாக பொய்யெழுதி தமிழனை இழிவு படுத்தினான்...

"கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே.:'

பொருளுரை: கெடுக இவளது சிந்தை. கடுமையானது இவளது துணிவு. இவள் முதிய மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான். முந்தா நாள் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையைக் கொன்று களத்தில் உயிர் நீத்தான். நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பகைவரின் பெரும் பசுக் கூட்டத்தைக் கவரும் முயற்சியைத் தடுத்துக் களத்தில் உயிர் துறந்தான். இன்று தெருவில் பறையின் ஒலியைக் கேட்டதும், விருப்பத்தால், மயங்கித் தன் ஒரே மகனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய உலர்ந்த குடுமியில் எண்ணையைத் தடவிச் சீவி முடித்து, அவன் கையில் வேலைக் கொடுத்துப் ‘போர்க் களத்தை நோக்கி செல்க’ என்று அனுப்பினாள்.
இந்தபுறநானூற்றுப் பாடலைத் தழுவியே ஆரியன் அபிமன்யு கதையை உருவாக்கினான்...
ஆரியர்கள் நடு ஆசியாவில் இருந்து வந்தவர்களாதலால். மோசசின் கதையைத் திருடி கர்ணன் கதையை உருவாக்கினார்கள்...
தமிழர்களை அடிமைப்படுத்தவே இராமாயணத்தையும் மகாபாரதக் கதைகளையும் எழுதி தாங்கள் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்...வந்தேறிகளல்ல என்பதை நிறுவ பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்..இதற்கு இராமாயணத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்த, பொன்னிற்காக , கம்பனும் தமிழினத்திற்கெதிரான உடந்தை...ஆகவே எவ்வகையில் பார்த்தாலும் தமிழன் என்பவன் எந்த மதத்தையும் சாராதவன். இந்து என்று சொல்லிக்கொள்பவன் என்றைக்கும் தமிழனல்ல...தமிழன் என்பவன் என்றைக்கும் இந்துவோ அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவனோ அல்ல....செந்தமிழே வெல்லும்....