"தலித்" சமூகத்தில் பெண் எடுத்து பெண் கொடுப்பீர்களா..?
"சே" அவர்கள் தாழ்ந்த சாதி...
"தலித்" சமூகத்து மக்களை உங்கள் ஊரில் குடியேற அனுமதிப்பீர்களா...?
"சே" அவர்கள் தாழ்ந்த சாதி. அவர்களை எப்படி எங்கள் கூட சேர்த்துக்கொள்வது...?
"தலித்" துகள் உங்கள் ஊரில் செருப்புப் போட்டுக்கொண்டு நடக்க அனுமதிப்பீர்களா...?
அநியாயம்...எங்கள் தெருவில் அவர்கள் செருப்புப்போட்டு நடமாடுவதா...? அனுமதிக்கவே மாட்டோம்...
தேனீர்க்கடையில் இருகுவளை திட்டத்தை நீக்குவீர்களா?
அதெப்படி...? அவங்க கீழ்சாதிக்காரங்க....அவங்களும் நாங்களும் ஒரே "கிளாசில்" டீ குடிப்பதா...?
"தலித்" துகள் தேரோட்டம் நடத்த அனுமதிப்பீர்களா?
ஆஹா தெய்வ குத்தம்...அவர்கள் தேரைத் தொடவே கூடாது..அவர்கள் தாழ்ந்த சாதி...
"தலித்' சவத்தை உங்கள் இடுகாட்டில் புதைக்க அனுமதிப்பீர்களா?
அதெப்படி ...எங்கள் சாதிப்பிணத்தின் அருகில் ஒரு தலித் பிணமா...? நாங்கள் பிணமாகப்போனாலும் அனுமதிக்க மாட்டோம்.....
"தலித்" இனத்தவருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு தேவை....
ஆஹா...அதெப்படி...? எல்லோருக்கும் ஒரே நீதி வேண்டும்..
என்னாங்கடா உங்க ஒரேநீதி நியாயம்....?
இந்தியாவில் ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்...அதுமட்டுமே இந்நாட்டின் நீதியை நிலைநிறுத்தும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக