செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தீண்டாமையின் தோற்றம்...(௪)

இனவேறுபாட்டின் அடிப்படையில் தீண்டாமை...(௪)


               கலாசாரத்தில் -நாகர்கள் மேம்பட்ட நிலையை எய்தியிருந்தார்கள் என்பதோடல்லாமல் இந்தியாவின் பெரும்பகுதியை நாகர்கள் ஆண்டிருக்கிறார்கள் என்பதையும் வரலாறு காட்டுகிறது.


              கிறித்துவ நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆந்திரப் பிரதேசமும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் நாகர்களில் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை ஒன்றுக்கும் மேலான ஆதாரங்களிலிருந்து காணலாம். சந்தவனாஸ் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்கள் சுட்டுகுல சட்டகர்ணிகள் ஏறத்தாழ நாக வம்சத்து இரத்த பந்தமுடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். சாலிவாஹனா வின் பிரதிநிதியான தவத்ரி மசட்புகலி ட்டா, சட்டவாஹனா குல ஆட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புராணங்கள் பிராமண-நாகர் கலப்பின் மூலம் ஏற்பட்டதாய் டாக்டர் .எச்.சி.ராய் சௌத்ரி குறிப்பிடுகிறார். அவர்களின் குல ஆட்சிப்பட்டியலில் காணப்படும் பெயர்கள் நாகர்களின் பெயர்களாகவே காணப்படுவதிலிருந்து இது மேலும் உறுதியாகிறது. சட்டவாஹனா அரசாண்ட இறுதிக் காலங்களில் நாகர்கள் பலம் பொருந்தியவர்களாக ஓங்கியிருந்தார்களென்பது - எண்ணற்ற உண்மைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவாஹனா மரபு வழியில் கடைசி அரசனான ஸ்கந்த நாகா என்ற நாகர்களின் தலைவன் புலுமாவிப் பிரதேசத்திலுள்ள பெல்லாரி, (இன்றைய கர்நாடகம்) மாவட்டத்தை ஆண்டதாகத் தெரிகிறது. இரண்டாவதாக சுட்டு அரசனொருவனின் மகள் நாகமுளானிகா - அவளுடைய ம்கன் சிவகந்த நாகஸ்ரீ என்பவனோடு ஒரு நாகனையும் அளித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரம்பரை வரிசையில் வரும் எல்லா அரசர்களுடைய பெயர்களும் ஒரே மாதிரிப்பெயராக இருப்பதால் நாகர்களோடு இவர்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவு இதனைப் புலப்படுத்துகிறது.மூன்றாவதாக, உரகப்பூரா என்னும் பெயர் சோரிங்கோய்  (இன்றைய நாகாலாந்து) என்னு பிரதேசத்தின் தலைநகர் - அந்நகரைத் தலைநகராகக் கொண்டு ஒரு நாக அரசன் நிலையான ஆட்சியை நிறுவி அப்பிரதேசத்தை நெடுங்காலம்ஆண்டிருக்கிறான் என்ற வரலாறு - நாகர்கள் அன்றடைந்திருந்த நிலை - வரலாற்றில் ஒரு தனி நிகழ்ச்சியல்ல என்பதைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு காலத்தில் இந்நாடு முழுவதும் மாட்சிமைக்குரிய நாகர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.


              இன்றைய பாகிஸ்தானிலுள்ள கராச்சி (டைமண்ட் சாண்ட்ஸ்) க்கருகில் உள்ள மஜேரிக்கா என்ற தேசம் - நாகர்களுடைய தேசமென்று இலங்கை மற்றும் சியாம் நாட்டு பவுத்த மரபு இலக்கியங்களிலிருந்து மேலும் நாம் அறிகிறோம்.

              கி.பி. மூன்றாம் நூற்றாண்டு மற்றும் நான்காம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும், வட இந்தியாவையும் பல நாக மன்னர்கள் ஆண்டார்களென்பதையும் புராணங்கள் - அக்கால நாணயம் - மற்றும் பதக்கப் பதிவுகள் - கல்வெட்டுகள் புலப்படுத்தும் சாட்சியங்களிலிருந்து தெளிவாக அறியலாம். விதுஷா, கம்பாவதி அல்லது பத்மாவதி மற்றும் மதுரா ஆகிய மூன்று சுயேச்சையான குழுக்கள் தனித்தன்மையுடன் இருந்ததாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது - அவைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி சற்றும் அய்யத்திற்கு இடந்தரவில்லை. பரசிவா பரம்பரையைச் சேர்ந்த ஒரே அரசனான பவநாகா என்பவன் தன்னை நாகர்களோடு இணைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இரண்டாவது குழுவைச் சார்ந்தோரின் நாணயம் மற்றும் பதக்க படிவ பதிவுகளைப்பற்றியோ அல்லது அச்சுத கணபதி நாகா அடையாளம் பற்றிய கேள்வியைப் பற்றியோ அல்லது அலஹாபாத் தூணில் புராண நாக அரசர்களோடு - நாகசேனாவைத் தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருப்பது பற்றியோ - புராணகால நாக அரசர்களோடு ஒப்பிட்டு இங்கு வாதத்திலிறங்கிவிட முடியாது. பண்டைய இந்திய வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிற அனைத்து நாகர்களிலும் வட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கி.பி. நான்காம் நூற்றாண்டு கால நாகர்களே மிகவும் மேம்பட்டவர்களாகவும் - வரலாற்றில் பெரிதும் நிலையான இடம் பெற்றிருப்பவர்களுமாகும். லாகூர் செப்பேட்டு முத்திரையைக் கொண்ட நாகபட்டா மற்றும் அவனுடைய மகன் மகாராஜா மகேஸ்வர நாகா ஆகியொர் இம்மூவகைக் குழுக்களில் ஏதாவதொரு வகையைச் சார்ந்தவர்களா, அல்லது நாக வம்சத்தில் அவர்கள் தனியானதோர் நாக குடும்பத்தவர்களா என்பது புலப்படவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் குஷானர் களி ன் பேரரசு வட இந்தியாவில் நாகர்களுடைய படையெடுப்பால் மறைந்துபோனதென்று டாக்டர் சி.சி.ராய் சௌத்ரி அவர்களின் முடிவு துல்லியமாய் புலப்படுத்துகிறது. சமுத்திர குப்தனின் படையெடுப்பால் நாகர்கள் நிராயுதபாணிகளாக ஆவதற்கு முன்னால் வட இந்தியாவின் பெரும் பகுதி நாகர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்திருக்க வேண்டும்....

                                                   ..........இன்னும் வரும்......

(அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய "தி அன்டச்சபிள்ஸ்" என்னும் நூலிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக