வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தீண்டாமையின் தோற்றம்

இன வேறுபாட்டு அடிப்படையில் தீண்டாமை...                                 (பாகம் 2 )

          இந்தியாவின் மீதான  அனைத்து அன்னியப் படையெடுப்புக்கள் - அவர்கள் பெற்ற வெற்றிகள் - அதன் வாயிலாக இங்கு தோன்றிய அமைப்பு அடிப்படையிலான குமுகாயப் பண்பாடுகள் அனைத்து நிகழ்ச்சிகளைப் பற்றியும் இந்தத் தத்துவம் கேள்விஎழுப்புகிறது. இந்தியாவின் மீது இரண்டு படைஎடுபுகள் நடந்திருக்கிறதென்று திரு. ரைஸ் அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின்மீதான் முதற்படைஎடுபை திராவிடர்கள் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் திராவிடரல்லாத பூர்வகுடிகளான இன்றைய தீண்டாத மக்களின் மூதாதையர்களையும்  அடிமைப்படுத்திக் - கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து - தீண்டாத மக்களாய் ஆக்கியுள்ளார்கள். இந்தியாவின் மீது இரண்டாவது படையெடுப்பு ஆரியர்களின் படைஎடுப்பாகும். ஆரியர்கள் - திராவிடர்கள் மீது படையெடுத்து வென்றார்கள். வெற்றிபெற்ற ஆரியர்கள் - தோல்வியுற்ற திராவிடர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி திரு ரைஸ் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவரை அழுத்தம் கொடுத்து கேட்போமானால் , அவர், ஆரியர்கள் - போரில் தோல்வியுற்ற திராவிடர்களை "சூத்திரர்கள்" ஆக்கினார்கள் எனலாம். அதன் வாயிலாக நாம் தொடர்நிகழ்ச்சிக் கோர்வையைப் பெறுகிறோம்..திராவிடர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து இன்றைய தீண்டாத மக்களின் மூதாதையர்களாகிய பூர்வ குடிமக்களை வென்று, அவர்களைத் தீண்டத்தகாதவர்களாய்  ஆக்கியுள்ளார்கள். திரவிடகளுக்குப் பின்னால் ஆரியர்கள் வந்தார்கள். ஆரியர்கள் - திராவிடர்களை வென்று சூத்திரர்களாக்கினார்கள். சூத்திரர்கள் மற்றும் தீண்டாத மக்கள் பற்றிய பிரச்சினைக்குரிய பல உண்மைகளை மிகச் சாதாரணமாகச் சொல்லியிருப்பதால் இத்தத்துவம் உயிர்ப்புத் திறமற்று பொருந்துவதாயில்லை..

                 

 பண்டையக்கால இந்திய வரலாற்றினை ஆழ்ந்தறிந்த வரலாற்று மாணவர்கள், ஆரியர்கள் - திராவிடர்கள் - தாசாக்கள் மற்றும் நாகர்கள்
ஆகிய நான்கு பெயர்களை அடிக்கடி வரலாற்றில் சந்தித்திருப்பர். இந்தப் பெயர்கள் எதனைக் குறிப்பிடுகின்றன? இக்கேள்வி, ஒருபோதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆரியர்கள் - திராவிடர்கள்- தாசாக்கள் மற்றும் நாகர்களாகிய இப்பெயர்கள் வேறுபட்ட இனங்களின் பெயர்களா?
அல்லது இந்நான்கு பெயர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான நான்கு பெயர்களா? இதுபற்றி பொதுவானதோர் கணிப்பு என்னவென்றால், இப்பெயர் வெவ்வேறான இனங்களின் பெயரே என்பதாகும். இந்து சமூக கட்டமைப்பைக் குறிப்பாக அதன் வர்க்க அடிப்படையையை விவரிக்க முயன்ற திரு.ரைஸ் அவர்களைப் போன்றவர்களின் தத்துவங்கள் பொதுவாக இவ்வகையிலேயே கணிக்கின்றன.இப்படிப்பட்ட ஓர் தத்துவம் ஏற்றுக்கொள்ளப்படுமுன் அவற்றின் அடிப்படையை அவசியம் அலசிப்பார்க்கவேண்டும்.

       ஆரியர்களின் தொடர்ச்சி முதல் அவர்கள் ஒரே இனவகையைச் சார்ந்தவர்களல்லர்என்பது அறுதியிட்ட உண்மை. அவர்கள் இரண்டு பிரிவினராக பிளவு பட்டவர்கள் என்பதும் அய்யமற்ற உண்மை. அந்த பிளவுண்ட இரண்டு வகையினரும் வெவ்வேறான பண்பாட்டினைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.ஒரு பிரிவினர் -இரிக் வேத ஆரியர்கள் என்றும் வேறு வகையினர் அதர்வண வேத
ஆரியர் என்றும் அழைக்கப்பட்டார்கள். பண்பாட்டு ரீதியில் அவர்கள் முழுமையாக
பிளவுபட்டிருந்தார்கள். இரிக் வேத ஆரியர்கள் யாகத்தில் (yajna) நம்பிக்கை
கொண்டிருந்தார்கள்.அதர்வண ஆரியர்கள் மாகி(magis)யை நம்பினார்கள்.
அவர்களின் புராண இலக்கியங்கள் வெவ்வேறானவை. இரிக் வேத ஆரியர்கள் ஊழிவெள்ள (deluge)தில் நம்பிக்கை கொண்டிருந்ததோடு, "மனு"விருந்துதான்தம்மினம் தோன்றியது என்று நம்பினார்கள். அதர்வண வேத ஆரியர்கள், தம்முடைய இனம் "பிரம்மா" அல்லது "பிரஜாபதி" மூலம் தோற்றுவிக்கப் பட்டதென்று நம்பினார்கள்.அவர்களின் இலக்கிய வளர்ச்சியும்கூட மாறுபட்ட பாதைகளினூடே அமைந்திருக்கிறது.
இரிக் வேத ஆரியர்கள் பிரமன் - சுத்ரா மற்றும் ஆரன்யா ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்கள். அதர்வண ஆரியர்கள் உபநிஷத்துக்களைப் படைத்தார்கள். அவர்களுடைய கலாசார முரண்பாடு மிக விரிந்த அளவிலானது. இரிக் வேத ஆரியர்கள் அதர்வண வேதம்
அல்லது உபநிஷத்துககளின் புனிதத்தை நெடுங்காலம் வரை ஏற்கமறுத்தார்கள். அவர்கள் ஏற்க இசைந்தபோது அதனை "வேதாந்தமென்று!!" அழைத்தார்கள். வேதாந்த மென்று அவர்கள் அழைத்தது இன்று நடைமுறையில் உள்ள வேதாந்தம் என்ற சொல்லுக்குரிய
பொருளுக்கு எதிரானது. இன்று வேதாந்தம் என்று சொல்லப்படுவது "வேதங்களின் சாரம்".அதாவது முன்னாள் குறிப்பிடப்படும் வேதங்களுக்கப்பாலும், சில மூலங்களுக்கு அப்பாறப்
பட்டதை இருந்தது. ஆதலால், வேதங்கள் மிகப் புனிதமானதல்லவென்றும் வேதப்படிப்பு"அனுலோமா"ப்போன்றதாகும்என்றும்கருதப்பட்டது.
இரண்டுவகைப்பட்ட ஆரியர்கள்,வெவ்வேறான இரண்டு இனங்களைச்சேர்ந்தவர்களா என்பது புலப்படவில்லை. ஆரியன் என்ற
சொல் - ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லா என்பதும் தெரியவில்லை. எனவே வரலாற்றாசிரியர்கள் ஆரியர்கள் ஒரு தனியினம் என்ற கணிப்போடு வரலாற்றை எழுதியுள்ள தவற்றினைச் செய்திருக்கிறார்கள் என்பது வெளிப்பாடு.
 


                                                             ....          இன்னும் வரும் ..

(அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய "தி அன்டச்சபில்ஸ் " என்ற நூலிலிருந்து...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக