வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தங்கச் சுரங்கத்தில் புதைக்கப்பட்ட தொழிலாளரின் வாழ்க்கை


கோலாரைக் கொள்ளையடிக்க கூட்டுச்சதி

- சு.பொ. அகத்தியலிங்கம்

ஜூலை 18 ஆம் தேதி மாலையோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்ப டோமாஸ் கபீர் ஓய்வுபெற்றார். 9 ஆம் தேதி மாலை ஒரு வழக்கு குறித்து தன் சேம் பரில் வைத்தே தீர்ப்பு வாசித்தார் . அந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் நடப்பதாக இருந்தது . அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன ? 13 ஆண்டுகளாக வீதியில் நிறுத்தப்பட் டுள்ள கோலார் தங்க வயல் தொழிலாளர் குடும்பங்களில் இந்த அவசரத் தீர்ப்பு ஒளியேற்றுமா ? இந்தத் தீர்ப்பைக் கொண் டாடுவது யார் ? ஏன் ?இந்தக் கேள்விகளை அலசும் முன் பழைய தகவலொன்றை அசைபோடு வோம். நீதிபதி கே .பாலகிருஷ்ணன் ஓய்வு பெறும் முன் அவசர அவசரமாக அளித்த தீர்ப்பு கர்நாடக சுரங்கக் கொள்ளையர் களுக்கு சாதகமாக அமைந்தது . ஓய்வு பெற்ற பின் அதீத சொத்துக்குவிப்பு வழக் கில் அவர் சிக்கினார். சமீபத்தில் தமிழக மாஜிஸ்ட்ரேட் ஒருவர், பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரைக் காதலித்துக் குடும்பம் நடத்தி ஏமாற்றியதற்காக கைது செய்யப் பட்டார் . அரியானா நீதிபதி ஒருவர், மனை வியை கொன்று கொலையை மறைத்ததற் காக கைது செய்யப்பட்டுள்ளார் . நீதிபதி கள் சிலர் சந்தேகத்துக்கு அப்பாற் பட்ட வர்களாக இல்லை; தீர்ப்புகளும் சிலவும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக அமைவதில்லை .தங்கவிலை ஏறிக்கொண்டே போகிறது.
தங்கச் சுரங்கத்தை தனியா ருக்குத் தரக்கூடாது . அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் காரண காரியங்களோடு கர்நாடக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப் பை ரத்து செய்தும் ; உலகளாவிய ஒப்பந் தப் புள்ளி குளோபல் டெண்டர் கோரி தனி யாரிடம் உண்மையான தங்க முட்டை யிடும் வாத்தை தாரைவார்க்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது ஏன்? எப்படி?உண்மை நிலவரம் அறிந்தவர்கள் தீர்ப்பின் மர்ம முடிச்சை அறியாமல் தவிக் கிறார்கள் ; ஆனால் வாழ்க்கை கிழிக்கப் பட்ட கோலார் தங்க வயலின் மூத்த தொழி லாளர்கள், “ ஈட்டி எட்டின வரைதான் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்ற பழமொழியைச் சர்வ சாதாரண மாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள். அவர் களின் அனுபவத் தழும்பு அப்படிச் சொல் லவைக்கிறதோ! சரி! சரி! கோலாருக்கு வருவோம் .கோலாரில் தங்கம் எடுக்கும் கலை மிகப்பழமையான தொழில் . நாகரிக மனிதன் தங்கம் என்கிற மஞ்சள் பிசாசை அதன் மதிப்பை அறிந்த காலந்தொட்டு தங்கத்தொழிலில் ஈடுபட்டுவரும் கேந் திரங்களில் கோலாரும் ஒன்று என்பர் வர லாற்று அறிஞர்கள் . பிரிட்டீசார் வரு கைக்கு முன்பே திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் அந்தச் சுரங்கங்களில் தங்கம் எடுத்து வந்ததாகத் தெரிகிறது . அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும் இதில் ஈடுபட்டதாகத் தகவல் உண்டு . ஆயினும் 1880 ல் ஜான் டெய்லர் அண்ட் கம்பெனி இத்தொழிலில் இப்பகுதியில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே முறை யான சுரங்க ஏற்பாடுகள் செயல்பாட் டுக்கு வந்தது எனில் அது மிகையன்று .குடியாத்தம், திருப்பூர், வேலூர் வட் டாரத்திலிருந்து கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களும் - சாதிய அடக்குமுறை தாங்கமுடியாமல் தப்பி வயிற்றுப்பாட்டிற்காக இங்கே வந்து குடியேறியவர்களுமே மிக அதிகம். பெரும்பான்மையோர் தலித்துகள். “தீண் டாமை தமிழ் நாட்டில் இவர்களை கோயி லுக்குள் அனுமதிக்க மறுத்த போது இங்கே கிறிஸ்துவ தேவாலயங்களின் வாசல் இவர்களுக்காகத் திறக்கப்பட்ட தும் , தங்களுக்கென சொந்த சாமியையும் சொந்தக் கோயிலையும் உருவாக்கிக் கொள்ள முடிந்ததும் தலித்துகள் இங்கே வர ஊக்கம் தந்தது ” - என்கிறார் கர்நாடக மாநில சிஐடியு தலைவரும் சுரங்கத் தொழிற்சங்கத் தலைவருமான வி.ஜே. கே.நாயர்.சுயமரியாதை உணர்வும் , தேசவிடு தலை ஆர்வமும் தமிழகத்தில் ஓங்கி யதன் எதிரொலி இங்கும் வலுவாய் எழுந் தது. 1930ல் சுமார் 16000ம் தொழிலாளர் கள் பணியாற்றி வந்தனர் . அவர்களுக்கு ஒரு அடையாள எண் தரப்பட்டு, செம்புத் தகட்டில் அடையாளம் பொறித்து இரும்பு வளையத்தில் கையில் காப்பு போல் பூட்டப்பட்டிருக்கும்; இவர்கள் தப்ப முயன்றால் சித்ரவதையை, கடும் தண்ட னையை அனுபவிக்க நேரிடும் . கொத்தடி மை கைவளையத்தை அகற்றக்கோரியும், கடும் குளிரிலிருந்து தப்ப ஒரு இடம் கோரியும் போராட்டம் வெடித்து 24 நாட் கள் நடந்தது. கே .ஆர் .சண்முகம் செட்டி யார் என்ற தேசபக்தர் களத்தலைவ ரானார். பிலிப் செயலாளரானார். போராட் டம் தீவிரமானது. துப்பாக்கிச் சூடு நடந்தது . 44 பேர் காயமடைந்தனர். பெரும் போராட்டத்துக்குப் பின் கைவளையம் அகற்றப்பட்டது .தொழிலாளர்களிடையே மெல்ல மெல்ல தொழிற்சங்க விழிப்புணர்வு ஏற் பட்டது. தமிழகத் தலைவர்கள் ப.ஜீவானந் தம், சாரி, சர்க்கரைச் செட்டியார் உள் ளிட்ட தலைவர்கள் பெரும்பங்காற்றினர் . வேறு சில தொழிற்சங்கங்கள் இருப்பினும் செங்கொடி இயக்கம் தொழிலாளர் தோழ னாய்- படைத்தளபதியாய் ஆனது . தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. செங்கொடிப் புதல்வர்கள் கே.எஸ். வாசனும் , வி.எம். கோவிந்தனும் வீரியமிக்க தலைவர்களாய் வலம் வந்த னர் . 1946 ஜனவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை 77 நாட்கள் தீர மிக்கப் போராட்டம் நடைபெற்றது. விளைவு குறைந்தபட்சக் கூலி 12 அணா(75 பைசா)விலிருந்து ஒரு ரூபாய் ஒரு அணா அதாவது 106 பைசாவாகக் கூலி உயர்ந்தது. வேறு சில சலுகைகளும் கிடைத்தன.மைசூர் சமஸ்தானத்துக்கு பொறுப் பாட்சி கோரும் போராட்டத்தில் தொழி லாளர்கள் குன்றா உறுதியுடனும், தளரா ஊக்கமுடனும் பங்கேற்றனர். வெகுண்டது பிரிட்டீஸ் அரசு . தொழிற்சங் கத்தை உடைத்தெறிய சதிவலை பின்னி யது . திடீரென 1946 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள் வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன், ராமசாமி, ராமையா , சுப்பிரமணி உட்பட ஆறுபேர் கொல்லப் பட்டனர். கோவிந்தனும் வாசனும் கைது செய்யப்பட்டன. தொழிற் சங்கங்களி டையே மோதல்கள் உசுப்பிவிடப்பட்டது. இந்து, முஸ்லிம் மதக்கலவரமாக மாற்ற வும் முயற்சிகள் பிரிட்டீசாரால் மேற்கொள் ளப்பட்டன.பத்திரிகையாளர் சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல் பல மதம் , சாதி , மொழி , இனம் இருப்பினும் பகைமையற்ற சமநிலை சமூகமாக கோலார் விளங்கியதே அதன் பாரம்பரியம் . போராட்டங்கள் தொடர்ந்தன . வெள் ளைக்காரன் நாட்டைவிட்டுப் போனாலும் சுரங்கத்தை விட்டு போகவில்லை .
1966ல் மைசூர் அரசாங்கம் சுரங்கத்தை ஏற்றெடுத்த பின்னரே இந்தியச் சுரங்க மானது . 1972 ல் மத்திய அரசு தேச வுடைமை ஆக்கியது . போராட்டங்களின் பயனாய் குடியிருப்பு, இலவசக் கல்வி, சுகாதாரம், குடிநீர் , சமூக நலத் திட்டங்கள் கிடைத்தன . 1956 முதல் ஒரு முறை வாசனும் , ஒரு முறை என். சி .நரசிம்மனும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சட்டமன்ற உறுப்பினராயினர். அடுத்து இராஜ கோபால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின் னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் . தேன். சு.மணி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். குடியரசுக் கட்சி, அஇஅதிமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஏனைய சந்தர்ப்பங்களில் வெற்றிபெற்றனர். தொழிற்சங்கத்திலும் கட்சி சார்பு சங்கங்கள் வலுப்பெற்றன சுரங்கத்தின் ஒவ்வொரு நூறு அடியும் ஒரு லெவல் எனப்படும். ஒவ்வொரு லெவ லாக கீழே போகப்போக தொழிலாளியின் துயரம் அதிகரித்தது. சிலிகாஸ் எனும் தொழில்சார் நோய் கடுமையாகத் தாக்கி யது. நுரையீரலை விஷ தூசித் தாக்கு வதால் மூச்சுத் திணறல் , இரத்த வாந்தி , சளி, காய்ச்சல் இதனால் மரணமும் ஏற் பட்டது. மண் சரிவாலும் சாவுகள் நேர்ந்தன.சிலிகாஸ் நோயிலும் விபத்துக் களாலும் இச்சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் இதுவரை 8000 பேர் உயிர்பலியாகி உள்ளனர். இதுவரை 800 டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. அதற் காக கொடுத்த இந்த உயிர்களின் பெரு மதிப்பை எப்படிக் கணக்கிடுவது ? எந்தக் கணக்கில் சேர்ப்பது ?லெவல் 174 ஆன போது, தொழிலாளர் கள் உயிரைப் பணையம் வைத்து கீழே போகத் தயங்கினர் . நிர்வாகத்தின் ஆட் குறைப்பாலும், ஊழியர் வெளியேற்றத்தா லும் படிப்படியாக ஊழியர் எண்ணிக்கை 8000 ஆகக் குறைந்தது . வேலை நியமனத் தடையும் அமலுக்கு வந்தது . இதனால் அத்தியாவசியப் பணிக்கு ஆளெடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. சுரங்கத்தை முடக்கிய போது 3500 பேரே பணியாற் றினர் . 2001 ஆம் ஆண்டு பா. ஜ. க ஆட்சி யில் சுரங்கம் முடக்கப்பட்டது . பணி நின் றது . தொழிலாளர்கள் எந்தப் பணப் பயனு மின்றி வீதியில் தூக்கி எறியப்பட்டனர் . அத்துக்கூலிகளாய் பஞ்சம் பிழைக்க அன்றாடம் பெங்களூருக்குப் பயணப்பட லானார்கள். சுரங்கம் மூடப்படக் காரணம் நஷ்டம் எனக்கூறப்பட்டது உண்மையா ?தங்கச் சுரங்கத்தில் நஷ்டம் ஏன்? என்பதை அறிய 1992-93 ல் எஸ்.எப்.ஆர். சாரி கமிஷன் அமைக்கப்பட்டது . தங்கம் விலையேறும் போது நஷ்டம் ஏன் ? இக் கேள்வி சாரியைக் குடைந்தது . மற்ற பொருட்கள் உற்பத்தியெனில் சந்தைப் படுத்தல் சிரமம் அதிகம் . இங்கு உற்பத் திப் பொருளே தங்கம் , வாங்குவது அரசு . பின் நஷ்டம் ஏன் ? தங்கம் உள்ளூர் சந் தையில் நாளும் விலை ஏறும் சூழலில் - தங்கக் கட்டுப்பாடு அமலில் இருந்த அன்றையச் சூழலில் லண்டன் சந்தை நிலவரப்படி தங்கவிலையைக் குறைவாக அரசு நிர்ணயித்தது . இதனால் 1972 முதல் 1985 வரை 13 ஆண்டுகளில் மட்டிலும் இந்த விலை பாரபட்சத்தால் ரூ.8400 கோடியை அரசு மறைமுகமாகச் சுருட்டிக் கொண்டது . அரசாங்கம் ஒரு பைசாகூட சுரங்கத்தில் மூலதனம் போடவில்லை என்பதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். மைசூர் சுரங்கம் , நந்தி துர்க்கா சுரங்கம் , சாம்பியன் சுரங்கம் இம்மூன்றிலும் சேர்த்தே இந்நிலைதான். சாரி கமிஷ னைத் தொடர்ந்து நடராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது . அதுவும் நட்டத்தின் பின்னால் உள்ள அரசின் மறைமுகச் சுருட்டலைச் சுட்டத் தவறவில்லை.இதற்கிடையில் தங்க உற்பத்தி சுருங்கியது . மேல் லெவல்களில் ஒரு டன் தாதுமண்ணில் 20 கிராம் வரை கிடைத்த காலம் மலை ஏறிட, படிப்படியாக 7 கிராம் , 5 கிராம் என்றானது .
இதுவரை மோச மில்லை . ஆனால் 174 லெவலில் அது வெறும் 0.7 கிராமாகக் குறைந்தது . இப் போது உற்பத்திச் செலவு மிக அதிக மானது . விருப்ப ஓய்வூதிய செலவு சுமை யும், அதற்கு அரசு கொடுத்த கடனுக்கு 17 சத வட்டிச் சுமையும் சுரங்கத்தை மூச்சுத் திணற வைத்தது.சுரங்கத்தை முடக்கி தொழிலாளரை கசக்கித் தூக்கி எறிந்தது.டெத் ஆப் மைன்ஸ் ‘சுரங்கத்தின் மரணம்’ என இதன் கதையை ஃபிரண்டு லைனில் எழுதும் போது பார்வதி மேனன் தலைப்புக் கொடுத்திருப்பார் . ஆனால் சுரங்கம் சாகடிக்கப்படாமல் கோமா நிலையில் இவ்வளவு காலம் வைத்திருந் ததும் இப்போது தோலோடு சுளையோடு விழுங்க பன்னாட்டு திமிங்கிலங்களை அழைப்பது ஏன்? சுரங்கத்தை மீட்க நடந்த முயற்சிகளும் விழுங்க நடந்த சதி களும் கொஞ்சமோ! அதையும் பார்ப் போம்.1992 ஆண்டே பி.ஐ.எப்.ஆர் எனப் படும் தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்தின் முன் சுரங்க நிலை ஆய்வுக்கு வந்தது. எட்டுமுறை கூடி விவாதித்து விட்டு 2000 ஆம் ஆண்டு சுரங்கப் பணி யை மூட்டைகட்டி வைக்க உத்தரவிட்டது. ஏ. ஏ. ஐ. எப். ஆர் எனப்படும் தொழில் மற்றும் மறுசீரமைப்பு ஆணையமும் அதே ஆண்டு இறுதியில் அதே முடிவுக்கு வந்தது. ஒரு டன் தாதுவில் கிடைக்கும் தங்கத்தின் அளவு ஒரு கிராமுக்கும் கீழே போவதால் உற்பத்தியை அதிகரிக்க நஷ்டமே ஏற்படும் எனக் கூறியது; அதே சமயம் தொழிலாளர்களில் ஒரு பிரி வினரும் சூப்பர்வைசர்களும் அடங்கிய பிரிவு கூட்டுறவு துறையில் சுரங்கத்தை நடத்த கேட்ட அனுமதியை ஆணையம் நிபந்தனைகளுடன் ஏற்றது . முதலில் கூட்டுறவு என்பதற்குப் பதிலாக பங்கு நிறுவனமாக மாற்றப்படவேண்டும் . உலகளாவிய டெண்டர் குளோபல் டெண் டர் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப் படவேண்டும் என்பன உட்பட பல நிபந் தனைகள் விதிக்கப்பட்டன. இக்குழுவே மத்திய அமைச்சர் கே . ஹெச் . முனியப் பாவின் கைப்பாவை அமைப்பு என்பது ஊரறிந்த கைப்புண் . இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலிய நிறுவனம் இருப்பது வெள்ளிடை மலை. இவர்கள் எழுப்பிய கோரிக்கை எதுவும் புதிதல்ல, சிஐடியு விடமிருந்து ஹை ஜாக் செய்ததுதான், ஆனால் அதனை அமலாக்க விட்டுக் கொடுத்தல் என்கிற சாக்கில் நீர்த்துப் போகச் செய்வதும் ; ஆஸ்திரேலிய நிறுவ னத்துக்குச் சாதகமாக பூசிமொழுகுவதும் தான் அவர்களின் சிறப்புப் பங்களிப்பு என்கிறார்கள் மூத்த தொழிலாளிகள். அவர்கள் அனுபவ வார்த்தைகள் பொய் யல்ல .ஆஸ்திரேலிய கம்பெனி லாபம் தராத ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற நாயாய் பேயாய் அலையுமா? நரித்தனங்களில் இறங்குமா? ஆம் , நரியின் கண் கோழியின் மீதுதான் . கோலார் தங்க வயலில் இறங்கி நடக்கும் யாரும் மலை மலையாய் குவிந் திருக்கும் கறுப்பு நிற மணல் குன்றுகளைக் காணலாம் . இதனை சைனைடு குன்று என்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் டெய்லிங் டம்ப்பு கூறுவர் . ஆனால் தங்கப் புதையல் இதில் இருப்பதைக் கண்டு கொண்டது அந்த ஆஸ்திரேலிய நிறு வனம். அங்கேதான் கொள்ளைக்காரன் மூளை மிகச் சரியாக திட்டமிடத்துவங் கியது.நம் ஊரில் பழைய பிலிம்சுருளை சேகரித்து வெள்ளி எடுப்போர் உண்டு. பழம் பட்டுப் புடவையிலிருந்து சரிகை எடுப்போர் உண்டு. அது போலத்தான் இதுவும் ஆனால் பெரும் கொள்ளை எப்படித் தெரியுமா ?38 மில்லியன் டன் சைனைடு குப்பைகள் உள்ளன . ஒரு டன் சைனைடு குப்பையிலிருந்து 0.7 கிராம் தங்கம் எடுக்கலாம் . இதற்கு சுரங்கம் தோண்டத் தேவை இல்லை. அரித்து அல்லது சலித் தெடுத்தால் போதும் லாபம் கொட்டும் . ஒரு சின்னக் கணக்கு 38 மில்லியன் என்றால் 3.8 கோடி டன் ஆகும். ஒரு டன்னில் 0.7 கிராம் தங்கம் கிடைக்கும். ஒரு கிலோ என்பது 125 பவுனாகும். அப்படியானால் ஒரு டன்னில் 1,25,000 பவுன். அதாவது ஒன்றே கால் லட்சம் பவுன் தங்கம் எடுக்கலாம். அதாவது 3.8 ஒ 1000 ஒ 1000 ஒ 0.7 ஒ 1,25,000= 3,32,50,00,00,000 பவுன் எனினும்; சேதாரக் கணக்கெல்லாம் போட்ட பின் னும் 25.9 டன் தங்கம் கிடைக்கும் எனக் குறைந்தப்பட்சக் கணக்கை அதிகார வர்க்கமே ஒப்புக்கொள்கிறது . மிகக் குறைவாகக் கணக்கிட்டாலும் 7,770 கோடி ரூபாய் கிடைக்கும் என்பதும் எல் லோரும் ஒப்புக்கொண்ட கணக்கு இது போக 12 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலமும், இதர கட்டிடங்களும், வசதி களும் கிடைக்கும்; சுரங்கத்தை நவீனப் படுத்தினால் மேலும் லாபகரமாகத் தங் கம் எடுக்க முடியும் . உண்மையில் பொன் முட்டையிடும் வாத்து இது. இதைக் கைப்பற்றவே ஆஸ்திரேலிய நிறுவனம் பெரும் முயற்சி எடுக்கிறது .இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசே சுரங்கத்தை ஏற்று நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இரட்டை ஓய்வூதி யப் பலனும், வாரிசுதாரருக்கு வேலையும் வழங்க வேண்டும். இக்கோரிக்கை களுக்காக வீதியிலும், நீதிமன்றத்திலும் , அரசியல் களத்திலும் முயற்சி எடுத்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதை மணிக்கணக்கில் விவரிக்கிறார் மார்க் சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜி .அர்ச்சுனன் .கர்நாடக உயர்நீதி மன்றம் சுரங்கத்தை அரசே ஏற்று நடத்த பரிந்துரை செய்தது. தங்கம் ஊசிப் போகாது. விலை ஏறிக் கொண்டே இருக்கும். தனியாரிடம் கொடுப்பது என்பதும் அமைச்சரவை முடி வல்ல என்பதையெல்லாம் ஆதாரத் தோடு சுட்டிகாட்டியது . இது தொழிலாளி வர்க்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றி யாகும் . இதனைக் கழுகுக் கண்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ? கைப்பொம்மை குழு மூலம் பொம்ம லாட்டம் துவங்கியது. மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் நாம் இக்கட்டு ரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தனியாருக்கு வழங்க ஆணையிட்டுள்ளது.இதனை பெரும் சாதனையாகக் கொண்டாடுகிறார் முனியப்பா .
ஆனால் தேசத்தின் பொற்களஞ்சியத்தை ஆஸ் திரேலிய நிறுவனம் வேட்டையாட வழி வகை செய்யப்பட்டுள்ளதாக சங்கத் தலைவரும் சிஐடியுவின் மூத்த தலைவரு மான வி.ஜே.கே நாயர் சுட்டிக் காட்டு வதுடன்; அரசே ஏற்று நடத்துவதுதான் சரியான ஒரே தீர்வு என்கிறார். மேலும் பெரும்பாலான தொழிலாளிகள் முதுமை அடைந்து விட்டதால் கிடைத்தது போதும் எனக் கருதுவார்கள் என முனியப்பா கணக்குப்போட்டு பிரச்சாரம் செய்கிறார் என்பதையும் விஜேகே சுட்டுகிறார். இரட்டை பணப்பயன் சிஐடியு ஆதிமுதல் கோரிவருவதே. சுரங்கப் பணி நிறுத்தப் பட்டதே தவிர நிறுவனம் முறையாக மூடப்படவில்லை. இதனை உயர்நீதி மன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது.எனவே அறிவிக்கப்பட்ட பணப் பயனுடன் 2001 ஆம் ஆண்டு முதல் இது வரையிலான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் . அது தவிர வாரிசு ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும். தேசத்தின் பொற்களஞ்சியத்தைக் காக்க மார்க்சிஸ்ட் கட்சியும் சிஐடியுவும் இறுதிவரை உறுதி யாகப் போராடும் என்கிறார் வி.ஜே.கே.தங்க இறக்குமதியை குறைக்க நீட்டி முழக்கும் சிதம்பரம் பல ஆயிரம் கோடி பெறுமான தங்கக் களஞ்சியத்தை காவு கொடுப்பதைத் தடுக்க வேண்டாமா? அந்நிய செலாவணி இருப்புக் குறைந்து பண மதிப்பு வீழும் சூழலில் நமது தங்கச் சுரங்கத்தை பாதுகாப்பது அரசின் கடமையன்றோ! தங்கம் துருப்பிடிக் காது! தங்க மதிப்பு குறைந்து போகாது! அதனைஇழக்கலாமோ ! வெள்ளையன் அன்று கொள்ளையடித்துப் போன கோகி னூர் வைரத்தை மீட்போம் என அடிக்கடி வீர வசனம் பேசும் அரசும் ஆட்சியாளர் களும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆஸ் திரேலியனோ வேறு எந்த அந்நியனோ கொள்ளை அடிக்க அனுமதிக்கலாமோ ? கேளாக் காதினராய் இருக்கும் ஐ.மு. கூட்டணி அரசின் செவிப்பறை கிழிய பாட்டாளி வர்க்கம் குரல் எழுப்பாமல் தங் கக் களஞ்சியத்தைத் தாரை வார்ப்பதை தடுக்கவே முடியாது.


அபுதாபி, முசஃபா துறைமுகம்

திங்கள், 17 ஜூன், 2013

தமிழர்க்கு மீண்டும் ஓர் அச்சுறுத்தல்.

தமிழ்நாட்டை, தமிழனைக் கூறுபோட்டு குட்டிச்சுவராக்க ஆரிய இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. அதற்கு தமிழகத்தை ஆளும் " தமிழன்மாதிரி" அரசியல்வியாதிகள் துணைபோவது மாபெரும் தமிழின வஞ்சகம்...
தஞ்சை திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட்ஈஸ்டெர்ன்
எனர்ஜி கார்ப்பொரேசன் என்ற கம்பெனிக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.
நிலத்தை தோண்ட உரிமை வழங்கி மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல்
அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் தர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஒன்றை 04.01.2011 அன்றுமுக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது
இரண்டு மாவட்டங்களில் 8 வட்டங்களில் எரிவாயு எடுக்கப்பட உள்ளது. இந்திய
அரசின் இந்த திட்டம் பாரம்பரிய தமிழின வாழ்வாதாரங்களைப் புரட்டிப்போட்டு
தமிழினத்தின் அடிப்படைத்தேவைகளான உணவு ,குடிநீர், இருப்பிடம் ஆகியவை-
சீரழித்து பெரிய அளவில் மக்களை அகதிகள்:ஆக்கும்.தமிழர்களின் பண்பாட்டு
வழிபாட்டுத் தலங்கள், கலாச்சாரச் சின்னங்கள் தொழில்கள் ஆகியவற்றைச்சிதைக்கும்.

இதனை பற்றி சமூக மாற்றம் பக்கத்தில் ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ளது...தற்பொழுது......மீத்தேன் வாயு எடுப்பதற்கு கிணறு தோண்டி முதல்கட்டமாக நிலத்தடி நீரை உறிஞ்ச இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது...நம் உயிரை கொடுத்தேனும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.இளைஞர்களே விழிப்புணர்வு அடைக......

மீத்தேன் திட்டத்தின் அவசரம் அவசியம் என்ன?
ஒரு பெரு நிலப்பரப்பை இழந்து நாம் பெறுவது என்ன?

மீத்தேன்,நிலக்கரி எடுக்க ஒதுக்கப்படும் நிலம்691 சதுரகிமீ. 1,71,190 ஏக்கர்கள்
இந்த நிலத்தில் 160,000 ஏக்கர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

1எக்கருக்கு 2160 கிலோவீதம் இருபோக சாகுபடியின் மூலம்
30 ஆண்டு காலத்தில் கிடைக்கும் வருமானம்

பயறு எக்கருக்கு ரூ9000 வீதம் 30ஆண்டுகால வருமானம்

மரம்/விறகு ஏக்கருக்கு 2 டன்,டன் ரூ2000 வீதம்
5 வருடங்களுக்கு ஒரு முறை

மாடுகள் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பதாக கொண்டு
மாடுகள் விற்பனை மூலம் 760000*4000*6

ஆடுகள் இரண்டாண்டுகளில் இரட்டிப்பதாகக்கொண்டு
ஆடுகள் விற்பனைமூலம் 670000*2500*15
கரும்பு,தென்னை,கடலை, மீன்,கைவினைப்பொருட்கள்,சிறுதொழில் உற்பத்தி
என பல்வேறு வருவாய் இனங்கள் இன்னும் கணக்கில் வரவில்லை.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை தந்து,இருப்பிடம் தந்து
வாழ்நிலமாக இருப்பதற்கான பொருளாதார மதிப்பீடும் சேர்க்கப்படவில்லை.

எரிவாயுவின் மதிப்பு??

0.98 டிரில்லியன்கன அடிஉள்ளதாககூறப்படும் எரிவாயுவில்
60% மட்டுமே எடுக்க முடியுமென கம்பெனி கூறுகின்றது

கனமீட்டர் ரூ.30 வீதம் எரிவாயுவின் மதிப்பு

ராயல்டி,வரி அதிகபட்சமாக 20% என்று கொண்டால்
அரசுக்கு கிடைக்கும் அதிக பட்ச தொகை

நிலவுடைமையாளர்கள் /மக்களுக்கு தரவேண்டிய இழப்பீடு

நிலவுடையாளர்களுக்குதரவேண்டியது
எக்கருக்கு மூன்று லட்சம் வீதம் 160000 எக்கர்
வீடு கட்ட செலவுத்தொகை 400000 வீடு
கால்நடைகொட்டகை 100000 கொட்டகை

மீத்தேன் வாயுவை அதளபாதாளம் வரை தோண்டித்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. அங்கக பொருட்களில் இருந்தும் மீத்தேன் எடுக்கமுடியும்.
கால்நடை,பறவைக்கழிவுகள்,மனித கழிவு ,இலைதழைகளில் இருந்து
சூழல் மேம்பாட்டுக்கு உகந்த முறையில் எடுக்கமுடியும்.
ஆனால்மன்மோகன் விரும்புகிறதனியார்கம்பெனிகள்/பன்னாட்டுக்கம்பெனிகள்
இந்த துறையில் மீத்தேன் எடுக்க வரமாட்டார்கள்.உடனடியான ஒரேயடியான
லாபம் அவர்களுக்கு கிடைக்காது.மன்மோகன் பொருளாதாரமா அல்லது
நாட்டு நலனா என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

கழிவுகள் எவ்வளவு மீத்தேன் எரிவாயுவை கொடுத்துவிடமுடியும்?

தஞ்சை திருவாருர்,நாகைமாவட்டங்களின்கழிவுகளை கணக்கில் கொள்வோம்
கால்நடைக்கழிவு,பண்ணைக்கழிவுகளில் இருந்து மீத்தேன் தயாரிக்கலாம்
ஒரு நாளில் கிடைக்கும் எரிவாயு!

11 லட்சம் மாடுகள் மாடு ஒன்றுக்கு 10 கிலோ வீதம்
பெறும் சாணம்
12.75 lஆடுகள் ஆட்டிற்கு 2 கிலோ வீதம் பெறும் சாணம்
12 லட்சம் மனிதர்களின் கழிவுகள்
பண்ணைக்கழிவுகள்
ஒரு கிலோ கழிவுக்கு 0.03 கனமீட்டர் வீதம்
கிடைக்கும் எரிவாயுவின் மதிப்பீடு

கன மீட்டர் ரூ 30 வீதம் கிடைக்கும் மீத்தேனின் மதிப்பு
இது ஒரு நாளில் கிடைக்கும் மதிப்பு

30ஆண்டுகளில் கிடைக்கும் எரிவாயுவின் மதிப்பு
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை மாவட்ட கழிவுகளை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால்
கிரேட் ஈஸ்டெர்ன் கம்பெனிதருகின்ற ராயல்டி,வரி யை விட மூன்றரை மடங்கு அதிக
லாபம் பெறமுடியும். ஆடு மாடுகளை வளர்க்க உழவர்களுக்கு உதவினால் 34246
கோடியை இரட்டிப்பாக ஆக்கவும் முடியும். இந்த கிராம மீத்தேனை வைத்து
போதிய மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். அணு/அனல் மின்சாரம் போன்ற
ஆபத்தான/சூழலை கெடுக்கும் மின்சாரத்தினை உறுதியாகத் தவிர்க்கலாம்.
கால்நடைவளர்ப்பை ஊக்குவித்து, கழிவுகளுக்கு ஒரு விலையும் தந்தால் கிராமிய
மீத்தேனை வளரும் ஒரு சக்தி ஊற்றாக மாற்றலாம்.உரத்தொழிற்சாலைகளை மூடிவிடலாம். தேவையேயில்லை.

(தமிழகத்தின் அனைத்து கால்நடைகழிவுகளின் மதிப்பை எண்ணிப்பாருங்கள்}
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ஒபாமாவிடம் நெய் வாங்க ஓடும்
இந்திய அரசின் செயல் வேடிக்கையானது.

புராதன கலைச்சின்னங்கள்,கோயில்கள்,குளங்கள்,கட்டப்பட்டுள்ள வீடுகள்,
காலம் காலமாக வளர்ந்து நிற்கும் சிறு/குறு தொழில்கள், கைவினைஞர்கள்
கலைஞர்கள், கருவியிசை வித்தகர்கள், சிந்தனைச்செல்வர்கள் என பல்முனை
ஆற்றலுடன் வளர்ந்து நிற்கும் இச்சமுதாயத்தினை தன் மடியில் தாங்கும்
அன்னைபூமியை கேவலம் 10000 கோடி ரூபாய்களுக்கு விற்றுவிட முடிவு செய்தது
அரசுத்தரப்பின் கயமை.அறியாமை. பன்னாட்டு கம்பெனிகளின்பொருளாதார
கனிம வேட்டைக்கு துணைபோகும் மன்னிக்கமுடியாத செயல்.

இழப்பீடு தருகிறோம்,வேலைதருகிறோம் போன்ற கவர்ச்சிகளைக்கொண்டு வருகிறார்கள்
நம்மை நிலத்தைவிட்டு வெளியேற்றும் வஞ்சகத்தோடு விரைந்து வருகிறார்கள்
.கடந்த 60 ஆண்டுகளில் பொய்வாக்குறுதிகளால் உழவர்கள் தங்கள் நிலத்தையும்
வாழ்வையும் இழந்தது போதும் . நாம் ஒரு குரலில் முழங்குவோம்.

காவிரிப்படுகை எங்கள் தாய்மடி.
காவிரிப்படுகையை உயிர்கொடுத்தேனும் காப்போம்.

மத்திய அரசே! மன்மோகன் அரசே !!

வஞ்சகம் அறிந்தோம்! இனியும் தாமதம் செய்யாதே!
காவிரி நதிநீரைத் திறந்துவிடு!!

மீத்தேன் , நிலக்கரி எடுத்தல் வேண்டவே வேண்டாம்
காவிரிப்படுகையில் கைவைக்காதே!


இளைஞர்களே....பெரியோர்களே.......அறிவார்ந்தோரே.....மாணவர்களே.....அறிஞர் பெருமக்களே.....பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வழக்குரைஞர்கள், என அனைவரும் ஒருங்கிணைந்த மிகப் பெரிய புரட்சியை சென்னையில் நடத்தவேண்டும். அது எகிப்து, சிரியா, லிபியா போன்ற புரட்சி போராட்டத்தை போல மிகப் பெரிய அளவில் இருக்கவேண்டும்........அனைவரும் ஒன்றிணையுங்கள்........எத்தகைய சக்தியாலும் தகர்க்க முடியாத ஒருங்கிணைவை உருவாக்கி.....நமது வாழ்வாதார தமிழக பூமியை காப்பாற்ற வேண்டும்........தமிழ் நாட்டை சுரண்டும் அந்நிய சக்தியை விரட்டி அடிப்போம்..........நன்றி திரைப்படைப்பாளர்  திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ....

தமிழர்க்கு மீண்டும் ஓர் அச்சுறுத்தல்.

தமிழ்நாட்டை, தமிழனைக் கூறுபோட்டு குட்டிச்சுவராக்க ஆரிய இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. அதற்கு தமிழகத்தை ஆளும் " தமிழன்மாதிரி" அரசியல்வியாதிகள் துணைபோவது மாபெரும் தமிழின வஞ்சகம்...
தஞ்சை திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட்ஈஸ்டெர்ன்
எனர்ஜி கார்ப்பொரேசன் என்ற கம்பெனிக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.
நிலத்தை தோண்ட உரிமை வழங்கி மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல்
அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் தர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஒன்றை 04.01.2011 அன்றுமுக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது
இரண்டு மாவட்டங்களில் 8 வட்டங்களில் எரிவாயு எடுக்கப்பட உள்ளது. இந்திய
அரசின் இந்த திட்டம் பாரம்பரிய தமிழின வாழ்வாதாரங்களைப் புரட்டிப்போட்டு
தமிழினத்தின் அடிப்படைத்தேவைகளான உணவு ,குடிநீர், இருப்பிடம் ஆகியவை-
சீரழித்து பெரிய அளவில் மக்களை அகதிகள்:ஆக்கும்.தமிழர்களின் பண்பாட்டு
வழிபாட்டுத் தலங்கள், கலாச்சாரச் சின்னங்கள் தொழில்கள் ஆகியவற்றைச்சிதைக்கும்.

இதனை பற்றி சமூக மாற்றம் பக்கத்தில் ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ளது...தற்பொழுது......மீத்தேன் வாயு எடுப்பதற்கு கிணறு தோண்டி முதல்கட்டமாக நிலத்தடி நீரை உறிஞ்ச இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது...நம் உயிரை கொடுத்தேனும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.இளைஞர்களே விழிப்புணர்வு அடைக......

மீத்தேன் திட்டத்தின் அவசரம் அவசியம் என்ன?
ஒரு பெரு நிலப்பரப்பை இழந்து நாம் பெறுவது என்ன?

மீத்தேன்,நிலக்கரி எடுக்க ஒதுக்கப்படும் நிலம்691 சதுரகிமீ. 1,71,190 ஏக்கர்கள்
இந்த நிலத்தில் 160,000 ஏக்கர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

1எக்கருக்கு 2160 கிலோவீதம் இருபோக சாகுபடியின் மூலம்
30 ஆண்டு காலத்தில் கிடைக்கும் வருமானம்

பயறு எக்கருக்கு ரூ9000 வீதம் 30ஆண்டுகால வருமானம்

மரம்/விறகு ஏக்கருக்கு 2 டன்,டன் ரூ2000 வீதம்
5 வருடங்களுக்கு ஒரு முறை

மாடுகள் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பதாக கொண்டு
மாடுகள் விற்பனை மூலம் 760000*4000*6

ஆடுகள் இரண்டாண்டுகளில் இரட்டிப்பதாகக்கொண்டு
ஆடுகள் விற்பனைமூலம் 670000*2500*15
கரும்பு,தென்னை,கடலை, மீன்,கைவினைப்பொருட்கள்,சிறுதொழில் உற்பத்தி
என பல்வேறு வருவாய் இனங்கள் இன்னும் கணக்கில் வரவில்லை.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை தந்து,இருப்பிடம் தந்து
வாழ்நிலமாக இருப்பதற்கான பொருளாதார மதிப்பீடும் சேர்க்கப்படவில்லை.

எரிவாயுவின் மதிப்பு??

0.98 டிரில்லியன்கன அடிஉள்ளதாககூறப்படும் எரிவாயுவில்
60% மட்டுமே எடுக்க முடியுமென கம்பெனி கூறுகின்றது

கனமீட்டர் ரூ.30 வீதம் எரிவாயுவின் மதிப்பு

ராயல்டி,வரி அதிகபட்சமாக 20% என்று கொண்டால்
அரசுக்கு கிடைக்கும் அதிக பட்ச தொகை

நிலவுடைமையாளர்கள் /மக்களுக்கு தரவேண்டிய இழப்பீடு

நிலவுடையாளர்களுக்குதரவேண்டியது
எக்கருக்கு மூன்று லட்சம் வீதம் 160000 எக்கர்
வீடு கட்ட செலவுத்தொகை 400000 வீடு
கால்நடைகொட்டகை 100000 கொட்டகை

மீத்தேன் வாயுவை அதளபாதாளம் வரை தோண்டித்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. அங்கக பொருட்களில் இருந்தும் மீத்தேன் எடுக்கமுடியும்.
கால்நடை,பறவைக்கழிவுகள்,மனித கழிவு ,இலைதழைகளில் இருந்து
சூழல் மேம்பாட்டுக்கு உகந்த முறையில் எடுக்கமுடியும்.
ஆனால்மன்மோகன் விரும்புகிறதனியார்கம்பெனிகள்/பன்னாட்டுக்கம்பெனிகள்
இந்த துறையில் மீத்தேன் எடுக்க வரமாட்டார்கள்.உடனடியான ஒரேயடியான
லாபம் அவர்களுக்கு கிடைக்காது.மன்மோகன் பொருளாதாரமா அல்லது
நாட்டு நலனா என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

கழிவுகள் எவ்வளவு மீத்தேன் எரிவாயுவை கொடுத்துவிடமுடியும்?

தஞ்சை திருவாருர்,நாகைமாவட்டங்களின்கழிவுகளை கணக்கில் கொள்வோம்
கால்நடைக்கழிவு,பண்ணைக்கழிவுகளில் இருந்து மீத்தேன் தயாரிக்கலாம்
ஒரு நாளில் கிடைக்கும் எரிவாயு!

11 லட்சம் மாடுகள் மாடு ஒன்றுக்கு 10 கிலோ வீதம்
பெறும் சாணம்
12.75 lஆடுகள் ஆட்டிற்கு 2 கிலோ வீதம் பெறும் சாணம்
12 லட்சம் மனிதர்களின் கழிவுகள்
பண்ணைக்கழிவுகள்
ஒரு கிலோ கழிவுக்கு 0.03 கனமீட்டர் வீதம்
கிடைக்கும் எரிவாயுவின் மதிப்பீடு

கன மீட்டர் ரூ 30 வீதம் கிடைக்கும் மீத்தேனின் மதிப்பு
இது ஒரு நாளில் கிடைக்கும் மதிப்பு

30ஆண்டுகளில் கிடைக்கும் எரிவாயுவின் மதிப்பு
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை மாவட்ட கழிவுகளை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால்
கிரேட் ஈஸ்டெர்ன் கம்பெனிதருகின்ற ராயல்டி,வரி யை விட மூன்றரை மடங்கு அதிக
லாபம் பெறமுடியும். ஆடு மாடுகளை வளர்க்க உழவர்களுக்கு உதவினால் 34246
கோடியை இரட்டிப்பாக ஆக்கவும் முடியும். இந்த கிராம மீத்தேனை வைத்து
போதிய மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். அணு/அனல் மின்சாரம் போன்ற
ஆபத்தான/சூழலை கெடுக்கும் மின்சாரத்தினை உறுதியாகத் தவிர்க்கலாம்.
கால்நடைவளர்ப்பை ஊக்குவித்து, கழிவுகளுக்கு ஒரு விலையும் தந்தால் கிராமிய
மீத்தேனை வளரும் ஒரு சக்தி ஊற்றாக மாற்றலாம்.உரத்தொழிற்சாலைகளை மூடிவிடலாம். தேவையேயில்லை.

(தமிழகத்தின் அனைத்து கால்நடைகழிவுகளின் மதிப்பை எண்ணிப்பாருங்கள்}
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ஒபாமாவிடம் நெய் வாங்க ஓடும்
இந்திய அரசின் செயல் வேடிக்கையானது.

புராதன கலைச்சின்னங்கள்,கோயில்கள்,குளங்கள்,கட்டப்பட்டுள்ள வீடுகள்,
காலம் காலமாக வளர்ந்து நிற்கும் சிறு/குறு தொழில்கள், கைவினைஞர்கள்
கலைஞர்கள், கருவியிசை வித்தகர்கள், சிந்தனைச்செல்வர்கள் என பல்முனை
ஆற்றலுடன் வளர்ந்து நிற்கும் இச்சமுதாயத்தினை தன் மடியில் தாங்கும்
அன்னைபூமியை கேவலம் 10000 கோடி ரூபாய்களுக்கு விற்றுவிட முடிவு செய்தது
அரசுத்தரப்பின் கயமை.அறியாமை. பன்னாட்டு கம்பெனிகளின்பொருளாதார
கனிம வேட்டைக்கு துணைபோகும் மன்னிக்கமுடியாத செயல்.

இழப்பீடு தருகிறோம்,வேலைதருகிறோம் போன்ற கவர்ச்சிகளைக்கொண்டு வருகிறார்கள்
நம்மை நிலத்தைவிட்டு வெளியேற்றும் வஞ்சகத்தோடு விரைந்து வருகிறார்கள்
.கடந்த 60 ஆண்டுகளில் பொய்வாக்குறுதிகளால் உழவர்கள் தங்கள் நிலத்தையும்
வாழ்வையும் இழந்தது போதும் . நாம் ஒரு குரலில் முழங்குவோம்.

காவிரிப்படுகை எங்கள் தாய்மடி.
காவிரிப்படுகையை உயிர்கொடுத்தேனும் காப்போம்.

மத்திய அரசே! மன்மோகன் அரசே !!

வஞ்சகம் அறிந்தோம்! இனியும் தாமதம் செய்யாதே!
காவிரி நதிநீரைத் திறந்துவிடு!!

மீத்தேன் , நிலக்கரி எடுத்தல் வேண்டவே வேண்டாம்
காவிரிப்படுகையில் கைவைக்காதே!


இளைஞர்களே....பெரியோர்களே.......அறிவார்ந்தோரே.....மாணவர்களே.....அறிஞர் பெருமக்களே.....பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வழக்குரைஞர்கள், என அனைவரும் ஒருங்கிணைந்த மிகப் பெரிய புரட்சியை சென்னையில் நடத்தவேண்டும். அது எகிப்து, சிரியா, லிபியா போன்ற புரட்சி போராட்டத்தை போல மிகப் பெரிய அளவில் இருக்கவேண்டும்........அனைவரும் ஒன்றிணையுங்கள்........எத்தகைய சக்தியாலும் தகர்க்க முடியாத ஒருங்கிணைவை உருவாக்கி.....நமது வாழ்வாதார தமிழக பூமியை காப்பாற்ற வேண்டும்........தமிழ் நாட்டை சுரண்டும் அந்நிய சக்தியை விரட்டி அடிப்போம்..........

செவ்வாய், 7 மே, 2013



மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை

by Marx Anthonisamy (குறிப்புகள்) on 7 மே 2013, 07:41 PM க்கு
                                                                                                                                                                மே 7, 2013
                                                                                                                                                                                                        சென்னை

சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை– புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை ஒட்டியதலித் குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. வன்னியர்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்துகிற சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டத்திற்குச்சென்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கூட்டத்தினர் கட்டையன்தெரு என்னும் தலித் குடியிருப்பிலுள்ள ஏழு வீடுகளையும் மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகிலும்,கூனிமேட்டிலும் உள்ள சாலையோரக் கடைகள் சிலவற்றையும் தாக்கி நாசப்படுத்தியுள்ளனர். மரக்காணத்திற்கும்கூனிமேட்டிற்கும் இடையிலுள்ள சுங்கச் சாவடியும் தாக்கப்பட்டுள்ளது.

இதை ஒட்டி நடந்த சாலை மறியல் மற்றும்கலவரத்தில் மூன்று அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 
ஆறு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.சாலை விபத்தில் இறந்த ஒருவர் உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தலித்.இருவர் வன்னியர்.இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அன்புமணி, கோ,க.மணி,காடுவெட்டி குரு உள்ளிட்ட முக்கிய பா.ம.க தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மரக்காணம் காவல்நிலையத்தில் கீழ்க்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:

1. முதல் தகவல் அறிக்கை 272/2013 – 300 பேர். குற்றஎண்கள் இ.த.ச 147,148, 294 (பி), 323, 324, 506 (2) rw வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்3 (1) (10), 3 (2) (3).

2. முதல் தகவல் அறிக்கை 273/2013 – 200 பேர். குற்றஎண்கள் இ.த.ச 147,148,  rw பொதுச் சொத்துக்கள்சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு (3).

3.  முதல்தகவல் அறிக்கை 277/2013 – 10 பேர். குற்ற எண்கள் இ.த.ச 147,148, 435,2) rw பொதுச் சொத்துக்கள்சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு (3) (4). 2. முதல் தகவல் அறிக்கை 273/2013

4. முதல் தகவல் அறிக்கை 278/2013 - 300 பேர். குற்றஎண்கள் இ.த.ச 147, 353,  rw பொதுச் சொத்துக்கள்சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு (3).

இவை தவிர அரியலூர் பி.செல்வராஜ் மற்றும் தஞ்சை எஸ்.விவேக்ஆகியோரது மரணம் தொடர்பான இரு குற்றப்பத்திரிக்கைகள் (274 மற்றும் 275/2013). பிரேதபரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் தலையில் வெட்டுக்காயம் பட்டு இறந்துள்ளார் எனத் தெரிந்தபின்அவரது மரணம் கொலை என்பதாக இப்போது விசாரிக்கப்படுகிறது. இருவரும் வன்னியர் சங்க மாநாட்டில்கலந்து கொள்ள வந்தவர்கள். இத்துடன் தலித் ஒருவரும் இறந்துள்ளார். சென்ற 27 அன்று ஜிப்மர்மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்டபோது இறந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டையன் தெருவைச்சேர்ந்த மு.சேட்டும் பா.ம.கவினரின் தாக்குதலின் விளைவாகவே இறந்துள்ளார் என அவரது உறவினர்களால்புகாரளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பா.ம.க தலைவர்களின் கைதை ஒட்டி மேலும் சுமார் 4500 பேர்தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இக் கைதை ஒட்டி ஆங்காங்கு வன்முறைகள்பேருந்துகள் தாக்கப்படுதல் முதலியன நடந்துகொண்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர்தீக்குளித்ததாகவும் அறிகிறோம்.

உண்மைஅறியும் குழு: கீழ்க்கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மைஅறியும் குழு ஒன்று இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் சென்றஏப்ரல்26,27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிட்டனர். அங்குள்ள மக்களிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் பேசினர். இக்குழுவில்பங்குபெற்றோர் :

1.  பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்(PUHR), சென்னை,
2.  கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு(FPR), புதுச்சேரி,
3.  பேரா.மு.திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,(CPML-ML), சென்னை,
4.  வி.சீனிவாசன், சுற்றுச் சூழல் மற்றும் சிவில் உரிமைஆர்வலர், சென்னை,
5.  கி.நடராசன், மக்கள் வழக்குரைஞர் கழகம், சென்னை,
6.  ப.பரிமளா, தமிழர் காப்பு இயக்கம் (Save TamilsMovement), சென்னை,
7.  இரா.முருகப்பன். இளைஞர் சமூக விழிப்புணர்வு மையம்,திண்டிவனம்,
8.  இரா.பாபு, இளைஞர் சமூக விழிப்புணர்வு மையம், கடலூர்,
9.  சி,செந்தளிர், தமிழர் காப்பு இயக்கம் (SaveTamils Movement), சென்னை,
10.  ப.பூவிளங்கோதை,தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils Movement), சென்னை,
11.  அ.சாதிக்பாட்சா, இந்தியன் தவ்ஹீத் ஜமாத், கூனிமேடு, மரக்காணம்.

சம்பவமும்பின்னணியும் : வன்னியர் சங்கத்தினர் பல ஆண்டுகளாக மாமல்லபுரத்தில்சித்திரை முழு நிலவுக் கூடல் நடத்தி வருகின்றனர். அதில் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தோர்பெருந்திரளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குவிவது வழக்கம். ஒருகுறிப்பான சாதி அடையாளத்துடன் கூடிய பெருமிதமும், கொண்டாட்ட மனநிலையும் கூடிய இம்மக்கள்,தமது ‘மற்றமையாக’ (other) தலித் மக்களைக் கருதுவது யாவரும் அறிந்த ஒன்று.
கிழக்குக் கடற்கரைச் சாலையில்புதுச்சேரி தொடங்கி மாமல்லபுரம் வரை, குறிப்பாகச் சென்னையிலிருந்து 95 கி.மீ தொலைவில்அமைந்துள்ள மரக்காணம் பகுதியை ஒட்டி தலித்கள், வன்னியர்கள், கிராமணிகள், முஸ்லிம்கள்முதலானோர் வசித்து வருகின்றனர்.  சாதிப் பெருமிதமும்கொண்டாட்ட மனநிலையும் கலந்து வரும் வன்னியர் சங்கத்தினர் தலித் மக்களுடன், அவ்வப்போதுமோதலில் ஈடுபடுவது உண்டு. இந்தக் கொண்டாட்ட மனநிலை பெரிய அளவு மதுப் பயன்பாட்டுடன்இணைந்த ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை.  இன்று பிரச்சினைக்குள்ளாகியுள்ள இதே இடத்தில்2002ல் ஒரு மோதல் நடந்து கொலையிலும் முடிந்துள்ளது. அதை ஒட்டிச் சில ஆண்டுகள் சித்திரைத்திருவிழாவும்கூட நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக பா.ம.க மற்றும்வன்னியர் சங்கத்தினர் மிகத் தீவிரமாக சாதி அரசியலை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்தஒன்று, தலித்கள் தவிர்த்த ஆதிக்க சாதிக் கூட்டணி ஒன்றையும் அவர்கள் இப்போது கட்டி வருகின்றனர்.தமிழகமெங்கும் இக்கூட்டணியினர் மாநாடுகள் நடத்துகின்றனர், சாதி மீறிய திருமணங்களுக்குஎதிராகக் கடு மொழி பேசி வருகின்றனர். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வன்முறைதொனிக்கவும், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சாதியினரை இழிவாகப் பேசுவதிலும்வல்லவர் என்பது ஊரறிந்த ஒன்று. இப்போது கிட்டத்தட்ட அதே அளவு வேகத்துடன் மூத்த தலைவர்இராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோரும் பேசத் தொடங்கியுள்ளனர்.

சென்ற ஆண்டு இதே சித்திரை விழாவில்குரு உமிழ்ந்த வெறுப்புத் தீ தருமபுரி தலித் குடியிருப்புகளை எரித்த கதையை நாம் அறிவோம்.பலர் கைது செய்யப் பட்டனர். உடனடியாக சுமார் 150 பேர்கள் அங்கு கைது செய்யப்பட்டபோதும்,மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நீதிமன்றத் தலையீட்டால் பாதிக்கப்பட்டோருக்குக் குறிப்பிடத்தக்கஅளவு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டபோதும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு கண்டுள்ள பலரும்இன்றுவரை கைது செய்யப்படவில்லை. குரு முதலானோர் வெறுப்பு உமிழும் பேச்சுக்களைத் தொடர்ந்துஉமிழ அனுமதிக்கப்பட்டனர். தலித்களைத் தவிர்த்த ஆதிக்க சாதி மாநாடுகளை மாவட்டந்தோறும்ராமதாஸ் நடத்தக் கூடிய நிலையும் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுச் சித்திரைத்திருவிழா குறித்து வன்னியர் சங்கம் மூன்று மாதங்கள் முன்பிருந்தே தமிழக அளவில் விளம்பரங்களைச்செய்யத் தொடங்கியது அப்போதே தமிழக அரசு எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். மாமல்லபுரத்தைநோக்கிய சாலைகளில் உள்ள தலித் குடியிருப்புகளுக்குப் போதிய பாதுகாப்பு அளித்திருக்கவேண்டும்.  சாதிகளுக்கிடையே பகையை வளர்க்கும்பேச்சுக்கள், தீண்டாமையை வலியுறுத்தும் பேச்சுக்கள் கடும் குற்றங்கள் என்பது குறித்தவிளம்பரங்களையும் எச்சரிக்கைகளையும் செய்திருக்க வேண்டும்.

தமிழக அரசு இவற்றில் கவனம் செலுத்தவில்லைஎன்பதோடு, ஏற்கனவே கலவரம் நடந்துள்ள மரக்காணம் போன்ற பகுதிகளிலும் கூடப் போதிய அளவுகாவல் துறையினரை நிறுத்தவில்லை. அன்றும் (ஏப்ரல் 25, 2013) சாதிவெறியும் மதுவெறியும்கலந்த போதையுடன் சாரி சாரியாக ஆயிரக் கணக்கான வாகனங்களில் திருவிழாக் கூட்டம் வந்துள்ளது.காலி சாராய போத்தல்களைத் தூக்கி எறிவது, கடைகளில் சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுக்காமல்தகராறு செய்வது, பெண்களை நோக்கி ஆபாசச் சைகைகள் செய்வது என்பதாகத் தம் கொண்டாட்ட மனநிலையைவெளிப்படுத்தி வந்த கூட்டத்தினர் மரக்காணம் பெட்ரோல் பங்குக்கு எதிரில் இருந்த இளநீர்க்கடையில் இப்படித் தகராறு செய்துள்ளனர். அப்போது மணி சுமார் 12.30 இருக்கும். சாலை ஓரத்தில்வண்டிகளை நிறுத்திச் சாப்பிடவும் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த கட்டையன் தெருஎனும் தலித் குடியிருப்பைச் சேர்ந்த டில்லிபாபுவின் மகன் ரமேஷைத் தாக்கியுள்ளனர்.

புதுச்சேரி – மாமல்லபுரம் கிழக்குக்கடற்கரைச்சாலையில் சாலைக்கு இடப்புறமாகச் சுமார் ஒரு.கி.மீ உள்ளே தள்ளி மரக்காணம் கிராமம்,காவல்நிலையம் முதலியன உள்ளன. சாலைக்கு வலப்புறம் சுமார் 400மீ தள்ளி கட்டையன் தெருஉள்ளது. சாலைக்கும் கட்டையன் தெருவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமானயூகலிப்டஸ் மற்றும் முந்திரி மரங்கள் நெருக்கமாக அமைந்த காடு உள்ளது.  சாலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெருவைப் பார்க்கஇயலாத அளவிற்கு இக்காடு அமைந்துள்ளது.

சாலையில் தாக்குதல் நடைபெற்றதைஅறிந்த கட்டையன் தெரு தலித் மக்கள் சுமார் முப்பது பேர் ஓடி வந்து சாலையில் குழுமியுல்ளனர்.இது போக்குவரத்தைத் தடை செய்துள்ளது. இரு புறமும் வாகனங்கள் தேக்கமடைந்துள்ளன, சிறிதுநேரத்திற்குப் பின் அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தியுள்ளனர்.இதில் கட்டையன் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் பிரவீண் குமார் காயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையில் காட்டினூடே புகுந்துமரங்களை ஒடித்துக் கொண்டு கட்டையன் தெருவிற்குள் நுழைந்த பா.ம.கவினர் அங்கிருந்த பெண்களிடம்ஆபாசமாகப் பேசியுள்ளதோடு பேன்டை அவிழ்த்துக் காட்டுவது முதலான ஆபாசச் செயல்களிலும்ஈடுபட்டுள்ளனர். வீடுகளுக்குத் தீவைத்துள்ளனர். பெட்ரோல் நிறைந்த பாட்டில்களைக் கொளுத்திவீசி (பெட்ரோல் குண்டுகள்) இவ் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பலரும் கூறினர், ஒரு கோவில்உட்பட ஏழு வீடுகள் எரிந்து சாம்பலாயின. பலாமரங்களும் எரிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குக்குஎதிரிலிருந்த ஏகப்பன் மகன் அசோகனின் பெட்டிக்கடையும் எரிக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட வீடுகளில் இருந்தநகைகள், ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் முதலியனவும் எரிந்தும் காணாமற்போயும் உள்ளன.27ந்தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தின் மகள் அனுசூயாவின் சீர்வரிசைப்பொருட்கள் எரிந்து போனதை ஒட்டி இன்று அவர் திருமணம் நின்றுள்ளது. சில வாக்குமூலங்கள் :

நதீமாக/பெ முருகன் : எனக்கு அஞ்சு பிள்ளங்க. அவரு வீட்ல இல்லை. 2.45மணி இருக்கும் கையில் தடி, கம்பி, கத்தியோட சுமார் 300 பேர் ஓடிவந்தாங்க.  சாதி சொல்லிப் பேசுனாங்க. அசிங்கமா வேட்டியெல்லாம்தூக்கிக் காமிச்சாங்க.. என் வயசுக்கு வந்த பொண்ணை (வயது 12) கூப்பிட்டாங்க. நாங்க பயந்துஓடிப் போயிட்டோம். ராத்திரி 7 மணிக்குத் திரும்பி வந்தபோது எல்லாம் சாம்பலா கிடந்துச்சு.பத்து பவுன் நகை, 1,90,000 பணம் எல்லாம் எரிஞ்சு போச்சு.

கலைவாணன்த/பெ கண்ணப்பன் : (தலைக் காயங்களுடன் பேச இயலாமல் பேசினார்) நான்பெரியார் போக்குவரத்துக் கழக்கத்துல வேல செய்துட்டு இருந்தேன். உடம்பு சரியில்லாம வேலையவிட்டுட்டேன். அன்னைக்கு வீட்ல படுத்திருந்தேன். சத்தம் கேட்டு வெளியில வந்து பாத்தப்பவீடெல்லாம் எரிஞ்சுட்டு இருந்துச்சு. நான் சத்தம் போட்டேன். என் வீட்டு மேலையும் ஒருபந்தத்தை எரிஞ்சாங்க. என்ன தலயில அடிச்சதுல கீழ விழுந்துட்டேன். “சத்தமா போடுற” ன்னுசொல்லி என் நாக்கையும் கொஞ்சம் அறுத்துட்டாங்க. இலங்கைத் தமிழர ஆதரிக்கிறதா ராமதாஸ்சொல்றாரே அதுக்கு என்னா அர்த்தம்? நாங்க எல்லாம் தமிழருங்க இல்லியா?

அல்லிமுத்துத/பெ துரைராஜ் : கூலி வேலை செய்யிறேன். வீடுகளை எரிக்கிறவங்களைத்தடுக்கிறதுக்காக ஒரு 15 பேர் ஓடுனோம்.என்னைப் பிடிச்சு என் கை விரலுங்களை வெட்டப் பாத்தாங்க. விரல் நரம்புங்க அறுந்து போச்சு.

அசோகன்த/பெ ஏகப்பன்: பெட்ரோல் பங்குக்கு எதிர பெட்டிக்கடை வச்சிருக்கேன்.இளநியும் விக்கிறேன் என் கடைய எரிச்சுட்டாங்க. 30,000 ரூபா சாமான் போச்சு. கம்பி வாங்க20,000 ரூபா வச்சிருந்தேன். அதுவும் போச்சு.
சாலையில் நின்றிருந்த வாகனங்களும்எரிக்கப்பட்டுள்ளன. மூன்று அரசுப் பேருந்துகள், ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் எனக்குறைந்த பட்சம் ஆறு வாகனங்கள் எரிந்துள்ளன. பேருந்துகள் பலவற்றின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட வன்னியர்சங்கத்தினரைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். ரப்பர் குண்டுகளாலும்சுட்டுள்ளனர். இதில் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பெரிய அளவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றதை ஒட்டி, நின்றிருந்த வாகனங்களை, அகரம் என்னுமிடத்திலிருந்துமீண்டும் புதுச்சேரி நோக்கிச் செல்லுமாறு காவல்துறையினர் பணித்துள்ளனர். மாநாட்டுக்குச்செல்ல இயலாமல் திருப்பி அனுப்பட்டதால் ஆத்திரமடைந்த வன்னிய சங்கத்தினர் கூனிமேட்டிலுள்ளஃபான்சி ஸ்டோர் ஒன்றைத் தாக்கி உடைத்துக் கொள்ளை அடித்துள்ளனர். கறிக்கடை ஒன்றையும்எரித்துள்ளனர். பள்ளி வாசலுக்குள் பீர் பாட்டிகளை வீசியுள்ளதோடு முஸ்லிம் பெண்களிடம்ஆபாசச் சைகைகள் காட்டியுள்ளனர். இரு வாக்குமூலங்கள்:

ஆனந்திக/பெ பஞ்சநாதன் : (சரவணா ஃபேன்சி ஸ்டோர் உரிமையாளர். இவர் ஒரு மீனவர்.கணவர் ஒரு தலித்)  மூணரை அல்லது நாலு மணி இருக்கும்.கடைல புகுந்து அலமாரிக் கண்ணாடிகளை உடைச்சாங்க, வெளியில் தொங்க விட்டிருந்த சட்டைகள்,மேட், பிளாஸ்டிக் சாமான், என்னோட செல் போன் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க. என் அஞ்சுவயசு மகன் சித்தார்த்தையும் அடிச்சாங்க..

கூனிமேடுஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எச். சகாபுதீன் : 11 குடியிருப்புகள் சேர்ந்ததுஇந்தப் பஞ்சாயத்து. மாநாடுக்குப் போகாம திருப்பி விடப்பட்டவங்க கடைகளை உடைச்சது உண்மைதான்.(பள்ளிவாயிலுக்குள் பீர் பாட்டில்களை வீசினார்களாமே, முஸ்லிம் பெண்களிடம் ஆபாசச் சைகைகள்காட்டினதெல்லாம் உண்மையா? எனக் கேட்டவுடன்) உண்மைதான். சொல்ல அவமானமா இருந்துச்சு.அதனால சொல்லல.
கூனிமேட்டில் இவ்வாறு தாக்குதல்நடந்தவுடன் அக்கிராமத்தைச் செர்ந்த முஸ்லிம்கள், தலித்கள், மீனவர்கள் மற்றும் உள்ளூர்வன்னியர்களில் சிலர் எல்லோரும் சேர்ந்து திருப்பித் தாக்கியுள்ளனர்.

மூவர்மரணம் : மரக்காணத்திற்கும் கூனி மேட்டிற்கும் இடையில் தஞ்சையைச் சேர்ந்தவிவேக், அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ் என இரு வன்னியர் சங்கத்தினர் அன்று சந்தேகத்திற்குரியவகையில் மரணமடைந்துள்ளனர். இதில் விவேக் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ், தலையிலுள்ள வெட்டுக் காயத்தால் மரணமடைதுள்ளதுஉறுதியாகியுள்ளது. அந்த வகையில் இது கொலை என்கிற நோக்கில் இப்போது புலன் விசாரிக்கப்படுகிறது.தலித்களால் தாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டார் என பா.ம.கவினர் கூறுகின்றனர். ஆனால் கொலைநடந்ததாகச் சொல்லப்படும் பகுதியில் பெரிய அளவில் தலித்கள் கிடையாது. அதோடு பெருந்திரளாகமாநாட்டுக்கு வந்தோரைச் சில தலித்கள் சென்று கொன்றிருக்க இயலுமா என்கிற கேள்வியை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் எழுப்பினார். அப்படியானால் நாங்களேஎங்கள் ஆட்களிக் கொன்று கொண்டோமா என்கிற கேள்வியைப் பா.ம.க வினர் கேட்கின்றனர். .

அதேபோல 27ந்தேதி ஜிப்மர் மருத்துவமனைக்குஇறந்த நிலையில் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டையன் தெரு செல்லன் மகன் சேட்டுவின்மரணம் பா.ம.கவினரின் தாக்குதலால்தான் நடந்துள்ளது என அவரது உறவினர்களால் இப்போது புகார்அளிக்கப்பட்டுள்ளது. 25ந்தேதி மதியம் தனது கொத்து வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த சேட்டை அவர் கட்டையன் தெருபக்கம் திரும்பியதைக் கண்டவுடன் சாலையில் குழுமியிருந்தவன்னியர் சங்கத்தினர் தாக்கியுள்ளனர். அடிபட்ட சேட்டு கடற்கரைப் பக்கமாக ஓடி எக்கேரிக்குப்பம் கடற்கரையில் ஒளிந்துள்ளார். 26 மாலை அப்பகுதி மீனவர்கள் கட்டையன் தெருவுக்குவந்து சேட்டு மயங்கிக் கிடப்பது குறித்துச் சொல்லியுள்ளனர். முதலில் மரக்காணம் மருத்துவமனைக்கும், பிறகு ஜிப்மருக்கும் அவரைத் தூக்கிச் சென்றபொழுது அவர் இறந்திருந்ததாக மருத்துவமனையில்கூறப்பட்டுள்ளது. பா.ம.கவினரின் தாக்குதலிலேயே அவர் இறந்ததாகக் கட்டையன் தெரு மக்கள்கருதுகின்றனர்.

இழப்பீடுகள்: எரிந்தவீடுகள் ஒவ்வொன்றிற்கும் 50,000 ரூ நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை வீடு கட்டும்திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எமதுபார்வைகள் : பாதிக்கப்பட்ட மக்க்கள் தவிர  விடுதலைச் சிறுத்தைகளின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர்வெற்றிச் செல்வன், மரக்காணம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தயாளன், செல்வம் ஆகியோருடனும்பேசினோம். பா.ம.க தரப்பில் எவ்வளவு முயன்றும் யாரையும் சந்திக்க இயலவில்லை. சந்தித்தசிலரும் பேசத் தயாராக இல்லை. கூனிமேட்டில் கடை வைத்துள்ள வன்னிய இளைஞர் காத்தவராயன்என்பவரிடம் பேசியபோது அவர் “எல்லாத்தையும் மக்கள் டி.வியில பார்த்துத் தெரிஞ்சுக்குங்க”எனச் சொல்லி முடித்துக் கொண்டார். எனினும் 25ந்தேதி சம்பவம் குறித்து மருத்துவர் இராமதாஸ்,அன்புமணி, குரு ஆகியோரது உரைகள் மற்றும் அறிக்கைகளை விரிவாகப் பரிசீலித்தோம். அவர்கள்சார்பாக இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட காட்சிப் பதிவுகளையும் பார்த்தோம். மரக்காணம்காவல்நிலையத்திற்குச் சென்றபோது அங்கு முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லை, விசாரணை அதிகாரியானடி.எஸ்.பி முருகேசன் அவர்களைத் தொடர்புகொண்டபோது விசாரணையில் உள்ள இவ்வழக்கு குறித்துஎதுவும் பேச இயலாது எனக் கூறிவிட்டார். விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்மனோகரனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.விசாரணையில் உள்ளவை, தெரிவிக்க இயலாதவை எனக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது நாங்கள்வற்புறுத்துவதில்லை. தமிழகமெங்கும் உயர் அதிகாரிகள் எங்களுடன் சிறந்த முறையுல் ஒத்துழைத்துவருகின்றனர், அவர்கள் கூறும் கருத்துக்களை நாங்கள் எந்த மாற்றமும் இன்றி வெளியிடுகிறோம்.இதன்மூலம் காவல்துறையின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைகின்றன. ஆனால் இது போன்று மிகச்சில அதிகாரிகள் எங்களைப் போன்றோருடன் பேச மறுப்பது வருந்தத்தக்கது. எங்களைப் போன்றமனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளை, “ஒரு மூன்றாவது விசாரணை மையம். இவர்களின் செயல்பாடுகள்பல நேரங்களில் உண்மைகளை வெளிக் கொணர்வதில் பெரும் பங்காற்றியுள்ளன. இவர்களின் செயல்பாடுகளைத்தடுக்க இயலாது.” என மதுரை உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு கூறியது குறிப்பிடத் தக்கது.

1.சென்ற ஆண்டுச் சித்திரைத் திருவிழாப்பேச்சுக்கள் தருமபுரிக் கலவரத்திற்குக் காரணமாக இருந்ததையும், அதன்பின் அதே திசையில்இன்னும் உக்கிரமாகப் பா.ம.கவினர் நகர்ந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தமிழக அரசுதவறியுள்ளது. இப்படியான ஒரு தாக்குதலை அரசும் காவல்துறையும் எதிர்பார்த்திருக்க வேண்டும்உரிய வகையில் காவல் கண்காணிப்புகளையும், தலித் குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பையும்அளித்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு பழைய வழக்குகளைத் தேடிப் பிடித்து ராமதாசின்மீது பிரயோகித்து அவர் மீது  அநுதாபம் ஏற்படஒரு வாய்ப்பைத் தந்திருப்பதைக் காட்டிலும் காவல்துறை இதில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

2, தருமபுரித் தாக்குதலில்500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர் என்பதே காவல்துறையின் மதிப்பீடு. முதல் தகவல்அறிக்கையும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டது. எனினும் இரண்டு மாதங்களுக்குப் பின் 150பேர்களுக்கு மேல் ஒருவரையும் கைது செய்ய வேண்டியதில்லை என அரசு முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு. காடுவெட்டி குரு முதலானோர் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து சாதிவன்முறையைத் தூண்டும் வகையில் பேச அனுமதிக்கப்பட்டதும், மருத்துவர் இராமதாஸ் மாவட்டந்தோரும்தலித்கள் அல்லாத ஆதிக்க சாதி மாநாடுகள் நடத்துவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததும் இத்தகைய வன்முறைகள் தொடர்வதற்குக்  காரணமாயிருந்துள்ளன.

3. தலித்கள் தவிர்த்த ஆதிக்க சாதிமாநாடுகள் நடத்தப்படுவதை மற்ற கட்சிகள் ஒப்புக்குத் தான் கண்டித்தனவே ஒழிய அதற்கெதிராகக்காத்திரமான எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. தருமபுரி தாக்குதலை ஒட்டி உடனடியாகப் போட்டிபோட்டுக் கொண்டு அங்கே ஆறுதல் சொல்லப் பறந்த கட்சிகள் எதுவும் அங்கு அது தொடர்பான வழக்குகள்எவ்வாறு நடத்தப்படுகின்றன, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனரா என்பதையெல்லாம்தொடர்ச்சியாகக் கவனித்து எதிர்வினையாற்றத் தவறின.

4. மரக்காணம் பகுதியில் இதே நிகழ்ச்சியைஒட்டி 2002ல் கலவரம் நிகழ்ந்திருந்தும் 25 அன்று உரிய காவல் பாதுகாப்பு அன்று இப்பகுதியில்தரப்படாதது வியப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அன்று மாமல்லபுரத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த நிலையில், மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகில் இப்படியான பிரச்சினையைஒட்டி போக்குவரத்து ஸ்தம்பிக்கக்கூடிய நிலையைக் காவல்துறை தவிர்த்திருக்க வேண்டும்.உடனடியான பேச்சுவார்த்தைகள் மூலம்போக்குவரத்துத் தடையை நீக்கியிருக்க வேண்டும். அதேபோலகலவரத்திற்குப் பின் தேங்கியிருந்த வாகனங்களை மீண்டும் புதுச்சேரி நோக்கித் திருப்பிஅனுப்பியதும் கூனிமேட்டுத் தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது.

5. 25 அன்று மதியம் 12 மணி தொடங்கிமாலை 5 மணிவரை கலவரம் நடந்துள்ளது தலித்களது வீடுகளும் கடைகளும் கொளுத்தப்பட்டுள்ளன.அப்படி இருந்தும் அன்றிரவு மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில் மருத்துவர் இராமதாஸ்,அன்புமணி, காடு வெட்டி குரு முதலானோர் இப்படியானதற்குக் குறைந்தபட்சமாக வருத்தம்கூடத்தெரிவிக்காதது மட்டுமல்ல, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், தரக் குறைவாகவும்பேசியுள்ளது வருந்தத் தக்கது மட்டுமல்ல வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் கூட.

6. அடையாள அரசியல் என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்றது என்பார் அமார்த்ய சென். ஒரு பக்கம் அது இதுகாறும் அடையாளம்மறுக்கப்பட்டவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அதனூடான ஒரு தன்னம்பிக்கையையும் வழங்கியபோதும்இன்னொரு பக்கம் அது பிற அடையாளங்களின் மீதான வன்முறையாகவும் மாறிவிடுகிறது, ஆதிக்கநிலையினர் இந்நிலை எடுக்கும்போது அது மிகவும் ஆபத்தாகிவிடுகிறது. தவிரவும் அடையாள அரசியலில்ஒவ்வொரு அடையாளத்தின் ஆதரவுத் தொகுதிக்கும் ஒரு அதிகபட்ச எல்லை வரையறுக்கப்பட்டு விடுகிறது,வன்னியர்களது மக்கள் தொகை வீதம் 11 சதம் என்றால் அதற்குமேல் ஒரு வாக்குகூட பா.ம.கவுக்குவிழப்போவதில்லை. எனவே இந்தப் 11 சதத்தையும் உச்சபட்சமாகத் தன் பிடிக்குள் கொண்டு வரவேண்டும்என்கிற நிலை பா.ம.கவுக்கு வந்து விடுகிறது. எனவே அது வேறு எது குறித்தும் கவலைப்படாமல்அதிகபட்ச வெறுப்பை பிறர்மீது கட்டமைக்கிறது. மருத்துவரது குடும்ப அரசியல் முதலான காரணங்களுக்காகபா.ம.கவின் வன்னிய ஆதரவு சற்றே பலவீனப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட இத்தகைய தீவிரநிலையை அது எடுக்கிறது.

கோரிக்கைகள்
1.   வன்முறைக்குக்காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பொருத்தமான பிரிவுகளின் கீழ்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டில் பேசியகளில் தலைவர்களில் சிலர் தலித்களைச் சாதி ரீதியாக இழிவு செய்து பேசியுள்ளனர். இன்னும்சிலர் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர், அவர்கள் மீது பொருத்தமானபிரிவுகளின் கீழ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்.தாக்குதலில் பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகஇருக்கலாம் என்கிற எண்ணத்திற்கு வித்திடுகிறது. காவல்துறை இந்தக் கோணத்திலிருந்தும்புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

2.   காவல்துறைப்பாதுகாப்பில் அன்று ஏற்பட்ட குளறுபடிகளையும், தலித் குடியிருப்பின்  மீதான அன்றைய தாக்குதலையும் ஆய்வு செய்ய நீதித்துறைவிசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். தவறிழைத்த மற்றும் கவனக் குறைவாக இருந்த காவல்துறைஅதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

3.   மாநாட்டுக்குவந்தவர்கள் தரப்பில் அரியலூர் செல்வராஜ் என்பவர் தலையில் வெட்டுப்பட்டு இறந்துள்ளார்.அதேபோல கட்டையன் தெருவைச் சேர்ந்த சேட்டுவின் மரணத்திலும் அய்யங்கள் உள்ளன. அவரது பிரேதபரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. எனினும் அவர் 25ம் தேதியன்று மாநாட்டுக்குவந்தவர்கள் தாக்கியதன் விளைவாகவே இறந்தார் என அவரது குடும்பத்தினர், குற்றம் சாட்டுகின்றனர்.இரு வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

4.   வன்னியர்சங்கம் நடத்துகிற சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் இத்தகைய கலவரங்களுக்குக் காரணமாகிறதுஎன்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இதற்கு அனுமதி மறுக்க வேண்டும்.

5.   இழப்பீடுகளைப்பொருத்த வரையில் எரிக்கப்பட்ட வீடுகளைப் பசுமைத் திட்டத்தின் கீழ் கட்டித் தருவது ஏற்புடையதுஅல்ல. இத் திட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் உதவி வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்கள்மட்டுமே. தவிரவும் பயனாளிகள் ஒவ்வொரு கட்டமாக வீட்டைக் கட்டிவிட்டுப் பின் அரசிடம்தொகையைப் பெறவேண்டும் இது சாத்தியமில்லை என்பதால் 5 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசுஅவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும்.

6.   எரிக்கப்பட்டதாகச்சொல்லப்படும் சொத்துக்கள், கடைச் சாமான்கள் ஆகியன உரிய முறையில் மதிப்பிடப்பட்டு விரைவாகஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். எரிக்கபட்ட குடும்ப அட்டை முதலான ஆவணங்கள் விரைவாகவழங்கப்பட வேண்டும்.

7.   இறந்துபோனவர்கள்மற்றும் காயம்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கு உரியஇழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் தலித்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கண்டவாறுஇந்த இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும்.

8.   கிழக்குக்கடற்கரைச் சாலைக்கும் கட்டையன் தெருவுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரிசர்வ் காடுதங்கள் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதாக அம்மக்கள் கருதுகின்றனர், எனவே அவ்வனப்பகுதியைஅவ்விடத்திலிருந்து நீக்கி வேறு இடத்தில் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

9.   சாதி வெறுப்புதொனிக்கப் பேசுவது, தலித் மக்களைச் சாதி அடிப்படையில் இழிவு செய்வது ஆகியன குற்றம்எனவும் அதற்கு எந்த அளவு தண்டனைகள் உண்டு என்பதை விளக்கியும் அரசு அவ்வப்போது இதழ்களில்விளம்பரம் செய்ய வேண்டும். கிராமங்களில் விளம்பரப் பலகைகள் நடவேண்டும்.






தொடர்புக்கு:அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 020
                                           செல்:+91 94441 20582