இனவேறுபாட்டின் அடிப்படையில் தீண்டாமை...
நாகர்களினின்றும் தாசாக்களை வேறுபடுத்திச் சொல்வதில் இன்னும் பெரிய தவறு புதைந்து கிடக்கிறது. தாசா (Dasas) கல் எனப்பட்டவர்கள் நாகர்களே. தாசாக்கள் - நாகர்களுக்கான மற்றோர் பெயராகும். வேதகால இலக்கியங்களில் - நாகர்கள் எங்கனம் தாசாக்கள் என அழைக்கப்பட்டார்கள் என்பதை புரிந்துகொள்வதில் சிரமமில்லை. தாக்கா (Dahaka) என்ற சொல் இந்தோ இரானியன் சொல்லிலிருந்து சமற்கிருதத்தில் மருவி தாசா என வழங்கப்பட்டது. தாக்கா (Dahaka) என்ற பெயர் நாக வம்ச மன்னரின் பெயராகும். பிற்காலத்தில், ஆரியர்கள் நாகவம்சத்து மன்னர்களின் பெயருக்குப் பின்னால் தாக்கா (Dahaka) என்றழைத்தார்கள். அதாவது, தாக்கா (Dahaka) என்ற சொல் சமற்கிருத வடிவம் பெற்று தாசா (Dasa) என்றாகி - அனைத்து நாக மக்களின் இனத்துக்குரிய பெயர்ச்சொல்லாக வழங்கப்பட்டது.
நாகர்கள் யார்? ஐயமின்றி, அவர்கள் ஆரியர்களல்லாதவர்கள். வேதகால இலக்கியங்களில் முரண்பட்ட இரண்டு சக்திகள் வெவ்வேறு அளவில் சிந்தனை மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான - இருவேறுபட்ட தனித்தன்மைகளை உயர்த்தி நிலைப்படுத்த போட்டி போட்டுக் கொண்டுள்ளதைத் தெளிவாக்குகிறது. இரிக் வேதத்தில் அகி வித்ரா (Ahi Vitra) வடிவத்தில் நாக தெய்வத்திற்கு நாம் அறிமுகப்படுத்தப் படுகிறோம். அந்த அகி வித்ரா ஆரியக் கடவுளான இந்திரனுக்கு எதிரி. பிற்காலத்தில் நாகா என்ற பெயருடன் நாக தேவதை என்ற சொல்லும் இணைந்து பிரசித்தமாய் இருந்திருக்கிறது. ஆனால், முற்கால வேத இலக்கியங்களில் அதனைக் காணமுடியவில்லை.சட்டபத்த skandhaபிராமணா (Sata Patha Brahmina) என்ற நூலில் (XI -2,7,12) முதன் முதலில் அவ்வாறு தென்பட்டபோதும், அது பிரசித்தமான நாக தெய்வத்தை க் குறிக்கிறதா?. அல்லது யானைக் கடவுளைக் குறிக்கிறதா? என்பது தெளிவாயில்லை. சட்ட பத்த பிராமணா வின் அகி வித்ரா இயல்பாகவே எப்போதும், இரிக் வேதத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல பூமியைச் சுற்றிக்கொள்ளவும் அல்லது நீர்ப்பரப்புக்குள் பதுங்கியிருக்கவும், வானம் - பூமிஎங்குமுள்ள நீர் நிலைகளைக் கட்டுப்படுத்தும் முழு வலிமையுடைய நாகன் என்று ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கின்றது..
"அகி வித்ரா" வைப்பற்றிய துதிப்படல்களுள், அண்ணாக தெய்வத்தை ஆரியக் குலமரபுக்குழுவினர் வழிபடவில்லை என்றும் - பெரும் பலமான ஒரு தீயசக்திஎன்று கருதி அதனை அழித்தொழிக்கவும் ஆரியர்கள் கருதினட் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
இரிக் வேதத்தில் காணும் நாகர்கள் பற்றியக் குறிப்பு, நாகர்கள் எந்த வகையிலும் பூர்வகுடிகள் இல்லையென்றோ அல்லது பண்பாடற்ற மக்கள் என்றோ எண்ணிவிட முடியாது. இந்தியாவை ஆண்ட அரச குழுமங்களுக்கும் - நாகர்களுக்கும்மிடையே மிக நெருங்கிய உறவு இருந்திருக்கிறது என்பதையும், திருமண நிகழ்வுகள் இடம் பெற்றிருப்பத்தின் வாயிலாக வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது. கடம்பா அரசர் கிருஷ்ணவர்மாவைப் பற்றி தேவகிரி க் குறிப்பேட்டில் கடம்ப குலத்தவர்கள் - நாகர்களோடு கொண்ட உறவின் தொடக்கத்தைப் புலப்படுத்துகிறது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் இராயக்கோட்டை மானியம் பற்றியக் குறிப்பு, அசுவத்தாமா ஒரு நாகியை மணந்ததாகவும் அதுவே ஸ்கந்த சிஷ்யா என்னும் பல்லவ கிளையுறவின் தொற்றமேன்றும் குறிப்பிடுகிறது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் வேறொரு பல்லவர் குறிப்பின்படி - வீரக்குர்ச்சா எனும் பல்லவ குல அரசன் ஒரு நாகியை மணந்துகொண்டதாகவும் அதன் வாயிலாக ஆட்ச்மைக்குரிய விருதுச் சின்னங்களை அவளிடமிருந்து பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பரவரசேனா அரசன் வக்கடக்கா வின் - கௌதமி புத்ராவின் திருமணம் பவ நாக அரசன் பரசிவாவின் மகளை மணந்தது ஒரு வரலாற்று உண்மை. அதேபோல, இரண்டாம் சந்திரகுப்த நாக குலத்தைச் சார்ந்த இளவரசி குவேரனாகாவை மணந்த ஒரு வைபவமும் ஆகும். முர்காலச்சோழன் கோக்கிள்ளி ஒரு நாக இளவரசியை மணந்ததாக ஒரு தமிழ்ப்புலவர் உறுதிப்படுத்துகிறார். இராஜேந்திர சோழன், தன வாளிப்பான அழகால் உயர்குடியைச் சேர்ந்த நாக இனத்துப் பெண்ணொருத்தியை மணந்து தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டான். பரமரா அரசன் சிந்து ராஜா (கி.பி.பத்தாம் நூற்றாண்டுத் தொடக்க காலத்தில் ஆண்டதாகத் தெரிகிறது) சசிபிரபா என்னும் நாக இளவரசியை மணந்ததை நவஷயசங்கசரிதா, மிக்க விவரங்களோடும் - தெளிவாகவும் - நிகழ்ச்சிகளை அற்புதமாய்க் கோர்த்து - அவைகள் முற்றிலும் உண்மையாய் நடந்ததாய் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் நாம் நம்பும்படி அறுதியிட்டுப் புலப்படுத்துகின்றன. "விக்ரஹராஜா" சஹாமணாவின் ஆறு தலைமுறைக்கு முந்திய அரசன் குவாக்கா I ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆண்டதாகக் கருதப்படுபவன் "நாகர்களுடைய அவையில் வீறார்ந்த புகழ்பெற்ற வீரனென்றும், ஏனைய இளவரசர் களினின்றும் பெருமைக்குரியவன் என்றும் " கி.பி. 1030 - 973 வாக்கில் "ஹர்ஷா" வின் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன. னாகக் குடும்பத்தைச் சார்ந்த திரிபுவன மகாதேவி என்ற பெண்ணை ஒரிஸ்ஸாவில் பவுமன் குல ஆட்சி வழிவந்த சானாதிக்காரா கி.பி. 921 ல் நடைபெற்றிருக்கக்கூடிய அவன் மகனின் திருமணக் கல்வெட்டில் குறித்திருக்கிறான்.
.....இன்னும் வரும்....
(அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய "தி அன்டச்சபில்ஸ்" என்ற நூலிலிருந்து.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக